கவிதை
தரணி வாழ்த்திட வா!
நெடுங்கடல் ஓடியும் தழிழ் கூறு
செம்மொழி நம்மொழி எனக்கூறு
செவிகள் குளிர்ந்திட அதைக்கூறு
சிந்தை மகிழ்ந்திடும் விதம்கூறு
முது மொழி நம் மொழி மூல மொழி
பிறந்தன இதன்வழி பல மொழி
இதற்கிணை ஏது ஒரு மொழி
செகத்திற் அறிந்த தமிழ் மொழி