கவிதை

உழவன்

சேறு மிதித்தால் சோறு கிடைக்கும் உலகுக்கு உரைத்தவன் உழவன்! - அந்த உண்மை அறிந்தே உள்ளம் மகிழ்ந்தே வணங்கி நிற்பவன் தமிழன்! எழுந்து ஒளிரும் ஆதவன் அருளைத் தொழுது வாழ்பவன் உழவன்! - அவன் உழுது விளைத்த உணவைப் பெற்றே உலகில் வாழ்பவன் மனிதன்!

கதை

சிறகு தேடி…

அன்வரும் அலியும் எழுந்து தன்மீது படிந்திருந்த மண்ணை தட்டிக்கொண்டார்கள். மாலை கதிரவனின் தூரத்து ஒளி கடற்கரையை அழகு படுத்தி இருந்தது. தென்றல் என்று சொல்ல முடியாத அளவிற்கு காற்று சற்று அழுத்தமாக வீசியது. இங்கும் அங்குமாக சிதறி களைந்துக்கொண்டிருந்த ஜனங்களோடு நண்பர்கள் இருவரும் நெறுக்கமாக நடக்கிறார்கள். “அலி, நபிலா நமக்கு உறவு பெண்ணல்ல இருந்தும் நாளை நாம் பஞ்சாயத்தில் கலந்துக் கொள்ளப் போகிறோம். சுமூக சீர் திருத்தத்திற்காக நம்மை நாமே ஓரளவு தயார் படுத்திக் கொண்ட பிறகு ஊரில் நடக்கும் எந்த பிரச்சனைக்கும் பஞ்சாயத்தார் நம்மை அழைக்கிறார்கள். நம் கருத்தை வெளிபடுத்த அது ஒரு வாய்ப்பாக அமைகிறது. நபிலா செஞ்சது சரின்னுதான் பஞ்சாயத்துல சொல்லப் போறேன்.”

கட்டுரை

மூவகை மக்கள்

சொல்லாமலே பெரியர் சொல்லிச் செய்வர் சிறியர் சொல்லியும் செய்யார் கயவரே - நல்ல குலமால வேற்கண்ணாய்! கூறுவமை நாடில் பலா மாவைப் பாதிரியைப் பார்! என்ற ஒளவைப்பாட்டியாரின் இப்பாடலின் கருத்தை அறிவது அவசியமல்லவா?

கவிதை

மஞ்சத்தின் பரிசு

வண்ணச் சேலைகட்டி வந்து நின்று, தென்னந் தோப்பெல்லாம் தேடி விட்டு, பின்னல் சடையாடக் கோபங் கொண்டு, தன்னந் தனிமையாளாய் வந்து விட்டாள். வீட்டிலே வேறொருவன் இருக்கக் கண்டு, பாட்டாலே பரவசத்தைக் காட்டி விட்டு,

நேர்காணல்

க்ருஷாங்கினி

க்ருஷாங்கினி என்னும் புனைப் பெயரில் எழுதிவரும் ப்ருந்தா நாகராஜனின் சிறுகதைகள், கவிதைகள், இலக்கியம் பேணும் இதழ்களிலும், வெகுஜன பத்திரிக்கைகளிலும் வெளி வந்துள்ளன. இணைய இதழ்களில் ஓவியம், நடனம் குறித்த இவரின் கட்டுரைகளும், இவை தொடர்பான பல விமரிசனக் கட்டுரைகள் வெகுஜன பத்திரிக்கைகளிலும் வெளி வந்துள்ளன.

 » Read more about: க்ருஷாங்கினி  »

கவிதை

மறவாதீர்

மலர்தொறும் நாடி மலிவுற வுண்டு மகிழ்வுறும் வண்டினம் போலக் கலைமொழிப் பண்பின் பலதிறங் கண்டு களிபெற வலம்வரு பெரியீர்! நலங்கொள வேண்டி நவின்றனன்! நீர்தாம் நாடிய நாடெது வெனினும் தலைமுறை யாகப் புகழுற வாழ்ந்த தமிழ்க்கலை மறக்கலிர் என்றும்!

By செவ்வேள், ago
கதை

அம்மா எனக்கொருத் தோழி

அம்மாவின் கனவுகளை மட்டுமல்ல, நினைவுகளையும் கூடப் பொய்யாக்கிவிட்டு ஓடிப்போனவன் நான். அம்மாவை இறுதியாக எப்போது பார்த்தேன். இருக்கலாம். ஓர் இருபது ஆண்டுகள் இருக்கலாம்.

என் மனத்துள் இருக்கும் அம்மா நூற் சேலையில்,

 » Read more about: அம்மா எனக்கொருத் தோழி  »

நேர்காணல்

‘திசைகள்’ மாலன்

திசைகள் என்னும் இணையப் பத்திரிக்கை ஆசிரியர் திரு.மாலன் பன்முகம் கொண்டவர். இந்தியா டுடே (தமிழ்) தினமணி, குமுதம் ஆகிய இதழ்களின் ஆசிரியராகப் பணியாற்றியவர். இப்போது சன் நியூஸ் தொலைக்காட்சியின் ஆசிரியராகப் பணியாற்றுகிறார்.அமெரிக்காவில் உள்ள புளோரிடா பலகலைக்கழகத்தில் இதழியல் படித்தவர்.

 » Read more about: ‘திசைகள்’ மாலன்  »

கவிதை

விதி

சொத்து! சொத்து!! என்றே நாட்டை முற்றும் சுரண்டி மூட்டை கட்டிச் சுற்றும் மனிதா! சுழலும் விதியால் அற்றுப் போகும் அமைத்த வாழ்வே! கண்ணில் பட்ட காட்சிகள் தம்மை எண்ணிப் பார்த்தே எழுதினேன் கவியே!

அறிமுகம்

கவிதாயினி இளம்பிறை

கவிதை என்ற பெயரில் நிறைய வெளி வருகின்றன. அவை கவிதைகளா என்பது சிந்தனைக்குரியது. ஆனால், அதிக எண்ணிக்கையில் கவிதை எழுதும்போது கவிதைப் போக்குகள் சிலவற்றை நாம் காணலாம். சுமாராக எழுதத் தொடங்கிப் பட்டை தீட்டப்பெற்று மிகச் சிறப்பான கவிதைகள் எழுதுவோர் உண்டு. இது, ஏறுவரிசை. மிகச் சிறப்பாக எழுதத் தொடங்கி, அடுத்தடுத்த படைப்புகளில் அந்தச் சிறப்பைத் தொட முடியாமல் சுமாராகத் தேய்வோர் உண்டு. இது, இறங்குவரிசை. ஒருவகைக் கட்டமைப்பில் ஒரே மாதிரி அலைவரிசையில் சிலர் எழுதுவர். இது, தொடர்வரிசை. பொதுவாக மோசமாகவும் திடீரென நல்ல கவிதைகளும் சிலர் எழுதுவ துண்டு. இது, லாட்டரிச் சீட்டுப்போல. எப்போதாவது தான் பரிசு விழும். இதற்குக் கவிஞரின் திறமை காரணமில்லை. வசமாக வந்து மாட்டிக்கொள்ளும் சொற்களே காரணம். இந்த வகைகளில் இளம்பிறையை முதல் வகையில் சேர்க்கலாம்.