அறிமுகம்

கவிதாயினி மதுமிதா

விக்கிரமாதித்யனின் அதிசய சிம்மாசனம் ஒரு நிலத்தில் புதைந்திருந்தது; காவலன் ஒருவன், அதன் மேல் நின்றான். அவனிடம் பரிவும் விருந்தோம்பலும் இன்னபிற நற்குணங்களும் நிறைந்திருந்தன. அந்தப் பீடத்திலிருந்து இறங்கினான்; மறுநொடி அந்த நற்குணங்கள் யாவும் அவனை விட்டு நீங்கின.

 » Read more about: கவிதாயினி மதுமிதா  »

அறிமுகம்

கவிதாயினி இளம்பிறை

கவிதை என்ற பெயரில் நிறைய வெளி வருகின்றன. அவை கவிதைகளா என்பது சிந்தனைக்குரியது. ஆனால், அதிக எண்ணிக்கையில் கவிதை எழுதும்போது கவிதைப் போக்குகள் சிலவற்றை நாம் காணலாம். சுமாராக எழுதத் தொடங்கிப் பட்டை தீட்டப்பெற்று மிகச் சிறப்பான கவிதைகள் எழுதுவோர் உண்டு. இது, ஏறுவரிசை. மிகச் சிறப்பாக எழுதத் தொடங்கி, அடுத்தடுத்த படைப்புகளில் அந்தச் சிறப்பைத் தொட முடியாமல் சுமாராகத் தேய்வோர் உண்டு. இது, இறங்குவரிசை. ஒருவகைக் கட்டமைப்பில் ஒரே மாதிரி அலைவரிசையில் சிலர் எழுதுவர். இது, தொடர்வரிசை. பொதுவாக மோசமாகவும் திடீரென நல்ல கவிதைகளும் சிலர் எழுதுவ துண்டு. இது, லாட்டரிச் சீட்டுப்போல. எப்போதாவது தான் பரிசு விழும். இதற்குக் கவிஞரின் திறமை காரணமில்லை. வசமாக வந்து மாட்டிக்கொள்ளும் சொற்களே காரணம். இந்த வகைகளில் இளம்பிறையை முதல் வகையில் சேர்க்கலாம்.