கதை

பிம்பம்

அம்மா, ஏம்மா நான் இவ்வளவு கருப்பா இருக்கேன்? கடந்த இரண்டு ஆண்டுகளில் புவனா இதே கேள்வியைப் பல முறை கேட்டு விட்டாள். தான் சிவப்பாக இல்லையென்று அவளுக்குக் கழுத்து வரை குறை.

ஒரே மகளின் மனம் அவளுக்குக் கண்ணாடியின் பிரதி பிம்பமாகவே தெரிந்திருந்தது.

 » Read more about: பிம்பம்  »

அறிமுகம்

ஜெயந்தி பேசுகிறேன்…

மதுரையில் பிறந்து இந்தியாவெங்கிலும் கோயம்புத்தூரிலிருந்து ஷில்லாங் வரை சுற்றிப் படித்துள்ளேன். அப்பாவின் வேலை அப்படி. திருச்சியில் சீதாலக்ஷ்மி ராமசாமி கல்லூரியில் 1985ல் BSc Physics பட்டம் பெற்றேன். இரண்டாம் மொழியாகப்படித்த தமிழை ஏழாம் வகுப்பிலேயே விட்டுவிட்டு வடமாநிலங்களில் ஹிந்தி படித்து, பிறகு மதிப்பெண்ணிற்காக கல்லூரியில் சம்ஸ்கிருதம் படித்தேன். தமிழே படித்திருக்கலாம் என்று பலமுறை எண்ணிக் கொள்கிறேன் இப்போதெல்லாம்.

நூல்கள் அறிமுகம்

‘சுபாஷிதம்’

tamilnenjamமகாகவி பர்த்ருஹரின் கவிதைகளை மஹாகவி பாரதியின் ஆசைப்படி ‘சுபாஷிதம்’ என்ற நூலாக தமிழுக்குக் கொணர்ந்திருக்கிறார் கவிதாயினி மதுமிதா.

முதல் பார்வையிலேயே என் எதிர் பார்ப்பையும் தாண்டி நூல் என்னைக் கவர்ந்ததை உணர்ந்தேன்.

 » Read more about: ‘சுபாஷிதம்’  »