கண்டும் காணாக் கண்மணியே – போகும்
கார ணமென்ன பொன்மணியே !
வண்டு விழியே மோகினியே – நீ
வாராய் அருகே மாங்கனியே !
மலரும் வண்டும் பேசுதடி – என்
மனதில் காதல் வீசுதடி !
நிலவும் உனைக்கண்(டு) ஏங்குதடி – உன்
நினைவால் ஆசை ஓங்குதடி !
சிரித்துப் பேசும் சிங்காரி – என்
சிந்தை பறிக்கும் ஒய்யாரி
சுரிகு ழலுற்ற பூக்காரி – விழி
சுழல மயக்கும் மைக்காரி!