கவிதை மறவாதீர் இளங்கதிர் எழவும் இறைகொளக் கருதி இணைந்தெழும் புள்ளினம் போல வளமுடன் வாழ மிகுபொருள் நாடி வையகம் சுற்றிடும் நண்பீர்! உளங்கொள வேண்டி உமக்கிது புகன்றேன்! உணருமின் அன்புடன்! நீர்தாம் By செவ்வேள், 19 வருடங்கள் ago ஜனவரி 13, 2006
கவிதை மறவாதீர் மலர்தொறும் நாடி மலிவுற வுண்டு மகிழ்வுறும் வண்டினம் போலக் கலைமொழிப் பண்பின் பலதிறங் கண்டு களிபெற வலம்வரு பெரியீர்! நலங்கொள வேண்டி நவின்றனன்! நீர்தாம் நாடிய நாடெது வெனினும் தலைமுறை யாகப் புகழுற வாழ்ந்த தமிழ்க்கலை மறக்கலிர் என்றும்! By செவ்வேள், 21 வருடங்கள் ago செப்டம்பர் 27, 2003