தந்தைக்கு ஒரு தாலாட்டு!

பத்துமாதம் வயிற்றுக்குள் பத்தியமாய்ச் சுமக்கவில்லை சித்தத்தில் உன்நினைவைச் சிறிதேனும் இறக்கவில்லை! தாலாட்டிப் பாலூட்டிப் பார்த்திருந்தே இரசிப்பதில்லை! ஆளாகி நீஉயர அறிவுருத்த மறப்பதில்லை! உயிரிருந்தால் போதுமென்ற உணர்வுடனே இருப்பதில்லை! உயிருக்குள் உனைவைத்த உள்ளுணர்வைச் சொல்வதில்லை! தந்தையிவர் எனக்காட்டும் தாய்மட்டும் உயர்வில்லை! சிந்தையிலே சிறைவைத்த தந்தைக்கோ நிகரில்லை!

கறுப்புத் துணியைக் கழற்றி எறி!

வாய்மை வெல்லும் எனச்சொல்லி ….. வழக்கு மன்ற நடுவினிலே தாய்மை கொள்ளும் பெண்ணிடத்தில் ….. தராசைக் கையில் கொடுத்துவிட்டுத் தூய்மை நீதி தேவதையாய்த் ….. துணிவாய் உன்னை நிற்கவைத்தார்! வாயைத் திறக்க வழியில்லை ….. வாய்..மெய் பேசும் நிலையில்லை! . பெண்மை என்றும் மென்மையெனப் ….. பெருமை பேசி சிலைவடித்தே வெண்மை நிறத்தில் உடைகொடுத்தே ….. வெள்ளை மனமாய் ஆக்கிவிட்டார்! உண்மை, நன்மை, தீமைகளை ….. உணர்ந்து பயந்தி டுவாயென்று Read more

இராவணன் !!

இறை வணக்கம் ! தங்கத் தமிழை அளித்திட்ட தமிழின் தலைவா முதல்வணக்கம் ! எங்கும் மணந்து கமழ்கின்ற எழிலே தமிழே என்வணக்கம் ! சங்கம் வைத்துத் தமிழ்வளர்க்கும் சான்றோர் தமக்கும் தலைவருக்கும் அங்கம் சிலிர்க்க தமிழ்கேட்கும் அவைக்கும் என்றன் நல்வணக்கம் ! – குரு வணக்கம் ! ஆசும் மதுரமும் ஆனந்த சித்திரமும் பேசும் பெரும்வித் தாரமும் – வீசுபுகழ்ப் பாட்டரசே ! நான்குகவி பாணரே ! என்குருவே ! Read more

உழவன்

சேறு மிதித்தால் சோறு கிடைக்கும்
உலகுக்கு உரைத்தவன் உழவன்! – அந்த
உண்மை அறிந்தே உள்ளம் மகிழ்ந்தே
வணங்கி நிற்பவன் தமிழன்!

எழுந்து ஒளிரும் ஆதவன் அருளைத்
தொழுது வாழ்பவன் உழவன்! – அவன்
உழுது விளைத்த உணவைப் பெற்றே
உலகில் வாழ்பவன் மனிதன்!