மின்னிதழ்

மலர்வனம் 7

ஹைக்கூ

வஃபீரா வஃபி

01.
தாவும் குரங்கு
நதியில் தலைமுழுகி எழும்
மரக்கிளை

02.
நண்பகல் வேளை
சக்கரங்களிடை சிக்கித் தவிக்கும்
வண்டி நிழல்

 03.

 » Read more about: மலர்வனம் 7  »

By Admin, ago
மின்னிதழ்

தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 07 – 2020

பாரதிக்குப்பிறகு தற்போது கவிதாமண்டலம் என்ற பெயரில் ஒரு அமைப்பினை வைத்து சங்க காலக் கவிஞர்களைக் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தும் ஒரு மாபெரும் கவிஞர்; தமிழையும் கவிதையையும் தனது இரு கண்களாகக் கொண்டு செயல்படும் ஒரு தன்மானத் தமிழன்;

 » Read more about: தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 07 – 2020  »

By Admin, ago
நேர்காணல்

தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 06 – 2020

தமிழ்நெஞ்சம் இதழுக்கான, நேர்காணலில் எம்மோடு இணைந்திருப்பவர் ஒரு எழுத்தாளர். சமூக ஆர்வலர், விமர்சகர் மற்றும் ஊடகவியலாளர் எனப் பல பரிமாணங்களில் மிளிரும், இலங்கையிலிருந்து வெளிவரும் பூங்காவனம் இலக்கிய சஞ்சிகையின் ஆசிரியர் வெலிகம ரிம்ஸா முஹம்மத்.

 » Read more about: தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 06 – 2020  »

அறிமுகம்

வாழ்வி(ய)ல் வசந்தம்!

உள்ளிழுத்து வெளிவரும் – என்
உஷ்ண மூச்சுக் காற்று
இதயத்தின் ரணங்களை
மொழிபெயர்க்கும்!

என் வீட்டு ஜன்னல் கதவு
என் மன ஓலத்தை எதிரொலிக்க
ஒத்தாசை புரியும்!

 » Read more about: வாழ்வி(ய)ல் வசந்தம்!  »

ஆன்மீகம்

வாரியார் படைப்பில், வாழ்வியல் நெறிகள்.

“அன்பால் அறிவால் அகங்குளிரும்
அமுதமொழியால் அனைவரையும்”

தன்பால் ஈர்க்கும் தகைமிகு பேச்சாளர், நல்ல எழுத்தாளர், மூதறிஞர், சித்திரகவி பாடிய கவிஞர், முத்தமிழ் அறிஞர், ஆன்மீகச் செம்மல் என்று அடுக்கிக் கொண்டே போகக்கூடிய வல்லமை பெற்ற வாரியார் சுவாமிகளின் நூல்களைப் படிக்கும் பொழுது தனிப்பெரும் இன்பம் தன்னால் வருவதை நாம் உணர முடியும்.

 » Read more about: வாரியார் படைப்பில், வாழ்வியல் நெறிகள்.  »

மரபுக் கவிதை

யாசக வாசலிலே…

இமைகள் வருடிய தாயும் எங்கே
இதயம் தொட்ட உறவுகள் எங்கே
இரக்கம் படைத்த நெஞ்சமும் எங்கே
இளமை வளமை இன்பம் எங்கே..எங்கே…?

தோளில் சுமந்த செல்வங்கள் எங்கே
தேடியச் செல்வங்கள் போனதும் எங்கே
ஓடி யாடி உழைத்த….தெல்லாம்
தேடியும் பார்த்தேன் தெரியவில்லை.

 » Read more about: யாசக வாசலிலே…  »

சிறுகதை

தண்டவாளத்தில் ஓர் உயிர்

அது மதுரையில் இருந்து ராமேஸ்வரம் போகிற பாசஞ்சர் ரயில். அந்த ரயிலோட டிரைவர் ஜான்சன்மற்றும் டீசல் அஸிஸ்ட்டண்ட் அழகர் எஞ்சினிலி ருந்தார்கள். அது மதுரையில் 7மணி அளவில் கிளம்பி 12 மணிஅளவில் ராமேஸ்வரம் சென்றடையும்.

 » Read more about: தண்டவாளத்தில் ஓர் உயிர்  »

புதுக் கவிதை

காடுகள்

காடுகள் – நம்
வாழ்விடத்தின் கடைகால்கள்
ஆனால்… நாம்
தகர்த்துக் கொண்டிருக்கிறோம்.

காடுகள் – நம்
உயிர்வளி சேமிப்பகங்கள்
ஆனால்… நாம்
செலவழித்து கொண்டிருக்கிறோம்.

 » Read more about: காடுகள்  »

இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 20

தொடர் 20

வெண்பா ஆசிரியப்பா இரண்டு பற்றியும் தெரிந்து கொண்ட நாம் அடுத்ததாக கலிப்பாவைக் காண்போம்.

இது 3 ஆவது பாவகை

மாமுன் நிரை
விளமுன் நேர்
காய்முன் நேர் இவை வெண்பா

நேர்முன்நேர்
நிரைமுன் நிரை
நேர் முன் நிரை
நிரை முன் நேர் இவை ஆசிரியப்பா

ஆனால் கலிப்பாவில்

காய்முன் நிரை வரும்
அதாவது கலித்தளை மிகுந்து வரும்
மற்ற தளைகள் குறைந்து வரலாம்
புளிமாங்காய் கருவிளங்காய் அதிகம் வரும்
கனிச்சீர்கள் வாரா
அளவடிகளால் ஆனது

கலிப்பா மற்ற பாக்கள் போல ஒரே உறுப்புகள் கொண்டமையாமல் பல உறுப்புகள் உடையது.

 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 20  »

இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 19

தொடர் 19

வெண்பாதான் கடினம் என்று புலவர்கள் சொல்வதுண்டு. வெண்பாவில் சிறப்பாக எழுதுபவர்களை வெண்பாப் புலி என்றும் அழைக்கப்படுவார்கள். நிறைய தமிழ் நூல்கள் வெண்பாவில் புனையப் பட்டுள்ளன. நீங்களும் இப்போது வெண்பா எழுத முற்பட்டிருப்பீர்கள் எனக் கருதுகிறேன்.

 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 19  »