என் காதல் ரோசா

‘‘தானேத் தன்னான்னே ஏய் தானேத் தன்னான்னே நல்லா தடம் பாத்து நடவு நடு தானேத் தன்னான்னே தை மாசம் அறுக்கனுமே தானேத் தன்னான்னே தாளம்போட்டு நடவு நடு தானேத் தன்னான்னே நல்லா தரை பாத்து வெளயனுமே தானேத் தன்னான்னே..!’’ என்று அழகாய் மெட்டெடுத்து, ராகம் போட்டு பாடிக் கொண்டே, முத்தழகி கட்டிய பாத்தியில் நாத்தை நட்டுக் Read more

மயிலாடுதுறையில் ஓர் இனிக்கும் தமிழர்

மின்னிதழ் / நேர்காணல் நேர்கண்டவர் பாவலர்மணி இராம வேல்முருகன் தமிழ் தன்னைத் தானே வளர்த்துக் கொள்ளத் தகுதியுள்ள யாரை யாவது தத்தெடுத்துக் கொள்கிறது. தமிழைக் கற்றுத் தேர்ந்து தமிழால் தனது வாழ்க்கையை நடத்துபவர்களைவிட தமிழை வளர்ப்பவர்கள் பெரும்பாலும் தமிழைக் கற்காத வர்கள் என்றால் அது மிகையல்ல. தமிழால் வளர்பவர்களைவிட தொடக்கக் கல்வியைக்கூட நிறைவுசெய்யாத ஒரு வரைத் Read more

தம்பி… 9

வாழ்வாயே மகிழ்வாக வாழ்த்திடவே பெரியோர்கள்
தாழ்வென்ற நிலையில்லை தளராமல் உழைத்திட்டால்
ஏழ்மையென்னும் நிலையில்லை ஏற்றத்தைப் பெறுவாயே
வீழ்வதெல்லாம் எழுவதற்கே வீறுகொண்டு எழுவாயே.

தம்பி… 8

ஏரோட்டம் இல்லையென்றால் ஏற்றமில்லை செல்வத்தில்
தேரோட்டம் ஓடாது தெம்மாங்கும் கேட்காது
காரோட்ட வாய்ப்பில்லை கஞ்சிக்கும் ஏமாற்றம்
நீரோட்டம் காத்திட்டால் நிச்சயமாய் நன்மையுண்டே.

வெய்யோனின் வேந்தன்

இராமாயணம் வாசித்தவர்கள் அதில் பல காண்டங்கள் இருப்பதை உணர்ந்திருப்பீர்… அது போல இந்த இராவண காவியத் தில் மூன்று காண்டங்கள் தமிழ்போல. த = தன்னிகரில்லா தமிழ்வேந்தனைப் பற்றி முதல் பகுதியிலிருந்து ஆரம்பிக்கின் றார் எழுத்தாளர் ஸ்ரீமதி. இராவணணைப் பற்றி இதுகாரம் பல புதினங்கள் வந்திருக்கின்றன குறிப்பாகச் சொன்னால் அசுரகாவியம் (வீழ்த்தப் பட்டவர்களின் வீர வரலாறு) Read more

அந்த ஒரு நிலவு

அத்தனை எளிதாய் இல்லை இருந்தும் மிகவும் நேர்த்தியாகவே கையாண்டு கொண்டிருந்தாள் அந்த காலையை அரக்க பரக்க ஓடி பேருந்தை அடைந்தவளை மட்டுமே எதிர்நோக்கிக் கொண்டிருப்பதைப் போல அவள் வருகைக்கும் பேருந்திற்கும் சரியாக இருந்தது. காலையில் குறிப்பிட்ட நேரத் துக்கு முன்பே அனு அந்த ஆபிஸுக்கு வந்து விட்டாள். இன்று அவளுக்கு முக்கியமான நாள்.நேர்முகத் தேர்வுக்காக அவளை Read more

காங்கோவில் தமிழர் கிரிஜாவின் கல்விச்சேவை

தமிழ்நெஞ்சம் அயலக தமிழ் உறவாகக் காங்கோ மக்களாட்சிக் குடியரசு நாட்டின் தலைநகர் கின்சாசாவில் செயல்பட்டு வரும் EIS (ஈ.ஐ.எஸ்) பள்ளியின் தாளாளர்கள் திரு.கண்ணன் – திருமதி.கிரிஜா கண்ணன் இணையரைத் தொடர்பு கொண்டோம். வாருங்கள் இந்த தமிழ் உறவுகளை அறிந்து கொள்வோம். இவர்கள் கடந்த 26 ஆண்டுகளாக ‘‘இங்கிலீஷ் இன்டர்நேஷனல் ஸ்கூல்’’ என்ற பள்ளியின் மூலம் ஆங்கில Read more

கீதாஞ்சலி

அரண்மனையும் தோரணமும் ஆடும் வாயில்
அணியணியாய் மணிவிளக்கம்‌ ஒளிரும் கோவில்
நிரல்நிரலாய் உன்னடியார் வந்து செல்லும்
நெரிசலிடைப் போற்றிசெயும் ஒலி முழக்கம்
கரைகாணாப் புகழ் வெளிச்சம் உனதேயாகக்
கனிவுடனே என்முகத்தைக் காண்பா யோநீ
தெருவினிலோர் மூலையிலே இசைக்கும் என்றன்
சிறுகுரலை என்னரசே கேட்பா யோநீ

ரெட்டைக் கிணறு

அந்திசாயும் வேளையில் சூரியன் மேற்கே மறைந்து கொண்டு இருந்தது. சாமியப்பன் அந்த பச்சை வயல்களுக்கு நடுவே அமைந்திருந்த கிணற்றை மெய் மறந்து பார்த்துக் கொண்டிருந்தான். நீண்ட நாட்களுக்கு பிறகு விடுமுறையில் சொந்த ஊர் திரும்பி இருக்கிறான். ராணுவத்தில் சேர்ந்து நான்கு ஆண்டுகள் போனதே தெரியவில்லை. அவ்வப்போது சொந்த ஊர் வருவது சுகமான அனுபவம். ஒவ்வொரு முறை Read more

அமைதிப்பூங்கா இராணிலட்சுமி

மின்னிதழ் / நேர்காணல் சுதந்திரப் போராட்டக் களத்தில் ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்ட வீரமங்கையின் பெயரைத்தாங்கிய மங்கை. குழந்தைத் தொழிலாளர்களையும் கொத்தடிமைகளையும் மீட்டு அவர்களுக்குப் புதியதொரு வாழ்க்கைக்கு வழிகாட்டும் அரசு ஊழியர். தொழிலாளர்நலத்துறையில் அலுவலர். தமிழை விரும்பிப் படித்து முதுகலைப் பட்டம் பெற்று மரபுக்கவிதைகளை யாக்கும் திறன் பெற்ற கவிஞர். ஏழைகளுக்கு அன்னமிடும் அன்னலட்சுமி. முகநூல்குழுமங்களை நேசிக்கும் Read more