உச்சந்தலை வருடி உரசும் காற்றில்
அருகினில் வந்து உரையாடி உறவாகி
வெட்கம் பூசி முகமது சிவக்க
வில்லாய் வலைக் கரம் வளைத்து,
பிறைநுதல் தொட்டு திலகம் தீட்டி
விரல் தீண்ட விரதமும் தீரும்!
சுவாசக் காற்றே தேவை இல்லை
மூச்சாய் என்னை சுமக்கும் அன்பே…
மனம் தொடும் காதல் சங்கீதமாய்
இயல் இசையை என்னுள் மீட்டுகிறாய்நீ !

9 Comments