அது மதுரையில் இருந்து ராமேஸ்வரம் போகிற பாசஞ்சர் ரயில். அந்த ரயிலோட டிரைவர் ஜான்சன்மற்றும் டீசல் அஸிஸ்ட்டண்ட் அழகர் எஞ்சினிலி ருந்தார்கள். அது மதுரையில் 7மணி அளவில் கிளம்பி 12 மணிஅளவில் ராமேஸ்வரம் சென்றடையும். மதுரை ஜங்க்சனில் மூன்றாவது பிளாட்பார்த்தில் இருந்து கிளம்ப தயாராக இருந்தது.

டிரைவர் ஜான்சனும் அழகரும் இஞ்சினில் பேராமீட்டர் களைச்சோதனை செய்து பார்த்துக் கொண்டிருந்தார்கள்.டீசல் அளவு வோல்டேஜ் ஆம்பியர் விசில் ப்ரேக எஞ்ஜின்ஸ்பீடு லூப் ஆயில் லெவல் எல்லாம் ஓகே. டிரைவர் பிளாஸ்க்கில் இருந்த டீயை சாப்பிட்டுக்கொண்டிருந்தார். சாப்பிட்டு விட்டு மீண்டும் வாங்கி வைத்துக் கொள்வதற்காக. இந்தா அழகர் உனக்கு ஒருகப் டீ என ஊத்தித்தந்தார். அதற்குள் டீ பாய் வர பிளாஸ்க்கை கழுவி டீ புல்லாக வாங்கிக்கொண்டார்

அப்போது பச்சை சிக்னல் விழ ஜான்சன் சிலுவைக் குறியிட்டு வணங்க அழகர் சாமியை கும்பிட்டு இஞ்சினைத்தொட்டு கும்பிட்டுவிட்டு லாங்க் விசில் ஒன்றைக் கொடுத்து வண்டியை கிளப்பினார்கள். பெருமூச்செடுத்து வண்டி மெல்ல டீசல் புகையைக் கக்கிக்கொண்டு, கிளம்பியது இடது புறமாகத்திரும்பி ராமேஸ்வரம் லைனில் பயணித்தது

அழகர் சைடில் பிளாட்பாரத்தில் பார்த்தார் யாராவது ஓடிவருகின்றார்களா என்று வயசாளிகள் வந்தால் வண்டியை ஸ்லோபண்ணுவார். யாருமில்லாததால் வண்டி நகரத்தொடங்கியது சிலைமான் தாண்டி வண்டி ஓடிக்கொண்டிருந்தது.

இஞ்சினின் வலப்பக்கம் டிரை வரும் இடப்பக்கம் அசிஸ்ட்டண்டும் பார்த்துக் கொள்வார்கள். கேட் வந்தால் விசிலடிக்க வேண்டும். முன்னே இருக்கும் தண்டவாளங்களில் ஏதேனும் தேவையில்லாத பொருள் இருக்கிறதா என்று பார்க்கவேண்டும். சிலசமயம் பாறைகள் உருண்டு நிற்கலாம், மாடுகள் கூட்டமாக நிற்கும். அப்போதெல்லாம் விசிலடித்து எச்சரிக்கை செய்யவேண்டும் சிலநேரங்களில் ஓரமாக நின்று கொண்டிருக்கும் ஆடுகள் அல்லது நாய் சடாரென்று குறுக்கே வந்துவிடும். அவ்வளவுதான் காப்பாற்ற முடியாது, தூரத்தில் பார்த்தால் வண்டியை ஸ்லோசெய்து விசில் கொடுத்து அப்புறப்படுத்தலாம். சில மனிதர்கள் தண்டவாளத்தில் செல்போனில் பேசிக்கொண்டு நடந்து பலியாயிருக்கின்றார்கள். அப்போ தெல்லாம் வண்டிஓட்டுபவர்கள் மனம் நொந்து அழும்

அன்று அதுபோல மானாமதுரை பரமக்குடி தாண்டி வண்டி போய்க் கொண்டிருந்தது
இரண்டாவது கப் டீயை ஜான்சன் சாப்பிட்டுக்கொண்டிருந்தார் அழகர் வெளியே தண்டவாளத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். தண்டவாளத்தில் தூரத்தில் ஏதோ ஒரு மூட்டைபோலத் தெரிந்தது. சில சமயங்களில் பிளாஸ்டிக் பொறுக்குபவர்கள் அதுபோல வைத்து ரயில் பாதையில் பொறுக்கிக் கொண்டிருப்பார்கள். எனவே அழகர் எச்சரிக்கை விசில் கொடுத்தார், ஆனால் பக்கத்தில் ஆட்கள் யாரையும் காணவில்லை. வழக்கமாக இதுபோன்ற சமயங்களில் வண்டி நிறுத்த மாட்டார்கள்

ஆனால் அழகர் உற்றுப்பார்த்தபோது மூட்டை அசைவதுபோல் தெரிந்தது. உடனே ஜான்சனை எச்சரிக்கை செய்தார், ஏதோ உள்ளே உயிர் உள்.ள பொருள் உள்ளது என

ஆனால் ஜான்சன் வண்டி ஆடுவதால் அப்படித் தெரிகின்றது என்றார். ஆனால் அழகர் தன்னிடமிருந்த பைனாகுலர் கருவியை எடுத்து உற்றுப் பார்த்தார்.
விசில் கொடுத்தார். மூட்டை வேகமாக ஆடத்தொடங்கியது. ஜான்சனிடம் சொன்னார் சந்தேகமில்லாமல் உள்ளே பிரச்சனை இருக்கிறது எனறு, உடனே கார்டுக்கு தகவல் கொடுத்துவிட்டு வண்டியை ஸ்லோ பண்ணினார்கள். மூட்டைக்கு அருகே வண்டியை நிறுத்திவிட்டு அழகர் குதித்து ஓடினார் மூட்டை அருகேமூட்டை வேகமாக ஆடிக்கொண்டிருந்தது ஜான்சன் எஞ்சினில் இருக்க அழகர் மூட்டையைப் பிரித்தார்
உள்ளே கைகால் கட்டப்பட்டு வாயில் பிளாஸ்த்திரி ஒட்டிய நிலையில் ஒரு பெண் 28 வயதிருக்கும் நடுங்கிக்கொண்டிருந்தார். அதற்குள் கார்டு ரயில்வே போலீஸ் எல்லாம் வந்துவிட அந்தபெண்ணை மீட்டு கட்டுக்கள் அவிழ்க்கப்பட்டு வாய் பிளாஸ்த்திரி அகற்றியபோது நடுங்கிக்கொண்டு மரண பயத்தில் இருந்தாள்.

அழகர் ஓடிப்போய் இஞ்சினில் இருந்து எடுத்துவந்து முதலில் இந்த தண்ணியை சாப்பிடு என்று கொடுத்து ஒருகப் டீயையும் கொடுத்தார் அப்போது தான் அவளின் படபடப்பு அடங்கியது. அவள் கையெடுத்துக்கும்பிட்டாள் ஓடிவந்து அழகர் காலில் விழுந்தாள் அய்யா நீங்கள் கடவுள் மாதிரி வந்து காப்பத்துனீங்க என்று கண்ணீரோடு. பின் விசாரணையில் தெரிந்தது அவளின் மாமியாரும் கணவனும் வரதட்சணை பிரச்சனையால் இதுபோல் செய்தார்கள் என்று அவர்களை கைது செய்யப்பட்டு வழக்குதொடர்ந்தது தனிக்கதை

இப்பொழுது ஜான்சன் அழகரை அழைத்துப் பாராட்டினார். உனக்கு மட்டும் எப்படி தெரிகிறது இதுவெல்லாம். என்ன இருந்தாலும் ஒரு உயிரைக்கொல்வதில் இருந்து காப்பாற்றியமைக்கு ஜீசஸ்க்கு ஸ்தோத்திரம் என்று சொல்லி சிலுவை குறியிட்டுக்கொண்டார்.
அழகரும் அடுத்தமாதம் வைகையில் இறங்கவிருக்கும் கள்ளழகருக்கு நன்றி சொன்னார். இந்த உயிகாக்கும் சிந்தனையை தந்து பழியில் இருந்து காத்தமைக்காக.

மீண்டும் ரயில் லாங்க் விசில் கொடுத்து ராமேஸ்வரம் நோக்கிப் பயணித்தது
அழகர் மீண்டும் தண்டவாளத்தை கண்காணிக்கத்தொடங்கினார்.

Categories: சிறுகதை

1 Comment

செல்லமுத்து பெரியசாமி · பிப்ரவரி 14, 2023 at 14 h 06 min

அருமை கவிஞரே!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

சிறுகதை

என் காதல் ரோசா

‘‘தானேத் தன்னான்னே ஏய்
தானேத் தன்னான்னே
நல்லா தடம் பாத்து
நடவு நடு
தானேத் தன்னான்னே
தை மாசம் அறுக்கனுமே
தானேத் தன்னான்னே
தாளம்போட்டு நடவு நடு
தானேத் தன்னான்னே
நல்லா தரை பாத்து
வெளயனுமே
தானேத் தன்னான்னே..!’’

என்று அழகாய் மெட்டெடுத்து,

 » Read more about: என் காதல் ரோசா  »

சிறுகதை

அந்த ஒரு நிலவு

அத்தனை எளிதாய் இல்லை இருந்தும் மிகவும் நேர்த்தியாகவே கையாண்டு கொண்டிருந்தாள் அந்த காலையை அரக்க பரக்க ஓடி பேருந்தை அடைந்தவளை மட்டுமே எதிர்நோக்கிக் கொண்டிருப்பதைப் போல அவள் வருகைக்கும் பேருந்திற்கும் சரியாக இருந்தது. காலையில் குறிப்பிட்ட நேரத் துக்கு முன்பே அனு அந்த ஆபிஸுக்கு வந்து விட்டாள்.

 » Read more about: அந்த ஒரு நிலவு  »

சிறுகதை

ரெட்டைக் கிணறு

அந்திசாயும் வேளையில் சூரியன் மேற்கே மறைந்து கொண்டு இருந்தது. சாமியப்பன் அந்த பச்சை வயல்களுக்கு நடுவே அமைந்திருந்த கிணற்றை மெய் மறந்து பார்த்துக் கொண்டிருந்தான். நீண்ட நாட்களுக்கு பிறகு விடுமுறையில் சொந்த ஊர் திரும்பி இருக்கிறான்.

 » Read more about: ரெட்டைக் கிணறு  »