என் க(வி)தை

நூற்றெண்பத்தொன்பது சீர் ஆசிரிய விருத்தம் (27×7 சீர்கள் ஓரடிக்கு) ×நான்கடி பூவிழிப் பார்வை நோக்கினில் வீழ்ந்து புதைந்திடு மகவை தனில்நானும் பொற்றமிழ்ப் பெண்ணாள் பார்வையி லின்பம் பொங்கிட வீழ்ந்து பொலிவுற்றேன் புண்ணெனத் தாக்கும் உற்றவர் மற்றோர் பொசுக்கியும் வாழ்வில் இடறாமல் பொங்கியெ ழுந்தேன் என்முனே நின்ற பொறுப்பையு ணர்ந்தே செயல்பட்டேன் புண்மைகள் தீர நன்மைகள் சேரப் போற்றிட லானேன் என்வாழ்வில் பொற்பினைச் சேர்க்கும் கல்வியைக் கண்ணாய்ப் பொங்கிடு மாவ லால்கற்றேன் Read more

வெடிதனை வெடிக்க வேண்டாம்!

வெடிதனை வெடிக்க வேண்டாம் – வான் வெளிதனைக் கெடுக்க வேண்டாம்! செடிகொடி மரங்கள் தன்னில் – வாழும் சிட்டினை அழிக்க வேண்டாம்! விலங்குகள் பறவை எல்லாம் – பெரும் வெடியினால் வெறுண்டே ஓடும்! அளவிலாத் துன்பம் கொள்ளும் – வாழ அஞ்சிடும்! அழிந்து போகும்! வெடிதனைச் செய்வ தாலே – பெரும் விபத்துமே நடக்கு தின்று! வெடித்தொழில் தம்மை விட்டு – இயற்கை விவசாயம் செய்ய வாரீர்! கந்தக வெடிம Read more

உண்டு!

பணஞ்சேர்க்க எண்ணுவரே அதிக முண்டு ! பணமின்றிச் செயமுடியும் செயலு முண்டு ! குணமிருந்தும் பணமின்றி இருப்போ ருண்டு ! கொள்கையிலே தோல்வியினைக் கண்டோ ருண்டு ! பணமிருந்தும் நிறைவேதான் காணா ருண்டு ! பண்பாட்டை மீறுகிற நபரு முண்டு ! அணங்கைத்தான் விரும்புகிற அணங்கு முண்டே ! ஆசைகளுக் களவில்லை என்பா ருண்டு ! நீருக்குள் வாழ்கின்ற உயிர்கள் உண்டு ! நேயத்தால் குறைகாணா திருப்ப குண்டு ! Read more

வருவாய் நிலவே!

நீலவானில் நீந்துகின்ற நிலவே நிலவே – என் நித்திரையைக் களைத்ததென்ன நிலவே நிலவே! நீலமலர் ஆடைகட்டி வந்தாய் நிலவே – என் நெஞ்சத்தில் மகிழ்ந்தாட வருவாய் நிலவே! தனிமையிலே தவழ்கின்ற தங்க நிலவே – உன் தாகத்தைத் தீர்த்துவைப்பேன் வருவாய் நிலவே! நனிசொட்டும் பார்வையிலே நனைந்தேன் நிலவே – உன் நறுங்கூந்தல் அழகினிலே கரைந்தேன் நிலவே! ஏக்கத்தில் திரிகின்ற என்றன் நிலவே – உனை எப்போதும் நான்காண வேண்டும் நிலவே! Read more

இராவணன் !!

இறை வணக்கம் ! தங்கத் தமிழை அளித்திட்ட தமிழின் தலைவா முதல்வணக்கம் ! எங்கும் மணந்து கமழ்கின்ற எழிலே தமிழே என்வணக்கம் ! சங்கம் வைத்துத் தமிழ்வளர்க்கும் சான்றோர் தமக்கும் தலைவருக்கும் அங்கம் சிலிர்க்க தமிழ்கேட்கும் அவைக்கும் என்றன் நல்வணக்கம் ! – குரு வணக்கம் ! ஆசும் மதுரமும் ஆனந்த சித்திரமும் பேசும் பெரும்வித் தாரமும் – வீசுபுகழ்ப் பாட்டரசே ! நான்குகவி பாணரே ! என்குருவே ! Read more

கனவு நாயகன் அப்துல்கலாம்!

தூக்கத்தில் வருவதல்ல கனவு – உன்னைத் தூங்காமல் செய்வதுதான் கனவாம் – என்றே ஊக்கத்தை நமக்கெல்லாம் தந்தவர் – இந்த உலகறியத் தலைமகனாய் வந்தவர்! இளைஞர்க ளின்எழுச்சி நாயகர் – அவர் இணையில்லாக் குணம்படைத்தத் தாயவர் – நாட்டின் நிலையறிந்து முன்னேறச் செய்தவர் – மக்கள் நெஞ்சத்தில் நீங்காமல் நிற்பவர்! கொள்கையிலே குன்றாக நின்றவர் – செயற்கைக் கோள்விட்டுச் சிகரத்தை வென்றவர் – நாட்டை வல்லரசாய் ஆக்கிடவே விளைந்தவர் – Read more

இழந்து விட்ட கணப்பொழுது

வாய்த்திட்ட இப்பிறவி ; வளர்ந்து நன்றாய் —-வண்டமிழின் புலமைபெற்றுக் கவிதை யாத்து தூய்மையான புகழுடனே உலகம் போற்ற —-துலங்குகின்ற பலநூல்கள் தமிழ்க்க ளித்துச் சேய்நானும் தலைநிமிர்ந்து நின்று நன்றாய் —-செழுமையான வாழ்வினிலே வாழ்வ தெல்லாம் தாய்தந்தை இருமனங்கள் கலந்தொன் றாகித் —-தமைமறந்த கணப்பொழுதின் இழப்பி னாலே ! இழக்கின்ற கணப்பொழுது பலரின் வாழ்வை —-இனிக்கின்ற வாழ்வாக உயர்த்தும் மேலே இழக்கின்ற கணப்பொழுது பலரின் வாழ்வை —-இன்னலுக்கு வழிகாட்டித் தள்ளும் கீழே Read more

பாவாணர் வழிச்செல் நண்பா!

பாவாணர் எழுத்தும் சொல்லும் …..பைந்தமிழை உணர்வாய்ப் போற்றும்! பாவாணர் உரைக்கும் பாட்டின் …..பண்ணிசைக்கப் பற்றும் நன்றாய்! பாவாணர் எழுச்சிக் காட்டும் …..பழம்பெருமைக் காக்க வேண்டும்! பாவாணர் வழிச்செல் நண்பா! …..பண்புடைனம் மொழியைக் கற்போம்!

கிடைத்த ஐம்பது உரூபா

நடைபயிற்சி மேற்கொள்ளும் காலை நேரம் —-நல்லிருட்டு விலகியொளி படரும் நேரம் விடைகொடுத்து சோம்பலுக்கு நடந்த போது —-விழிகள்தாம் கண்டதொரு பணத்தின் தாளை ! கடைக்கண்ணால் இருபுறமும் பார்த்த வாறு —-கால்விரலால் எடுத்ததனைக் காணும் போது கிடைத்தத்தாள் ஐம்பதென்று தெரிந்து கொண்டு —-கீழ்ச்சட்டைப் பைக்குள்ளே மறைத்து வைத்தேன் ! இயல்பாக நடப்பதற்குத் தொடங்கும் போதோ —-இருநண்பர் அருகினிலே வந்து சேர்ந்தார் கயல்முள்தான் பல்லிடுக்கில் சிக்கிக் கொண்டு —-கடுகடுப்பைத் தருவதைப்போல் நெஞ்சிற் குள்ளே Read more

அவளென் பா

விருத்தப்பா தென்றலுமே தீண்டிடவே சிலிர்கும் பூக்கள் ….. சிங்காரங் குறையாது சுரக்கும் தேனை சென்றமர்ந்து வண்டுகளும் சுவைக்கு மன்றோ ….. சிறகுகளால் மகரந்த சேர்க்கை பூவில்! தன்காம்பில் காய்கனிகள் தோன்ற பூக்கும் ….. தன்னிழலில் பசியாற உதவும் பாரீர்! என்னற்ற மலர்களெல்லாம் வாசம் வீச ….. என்னிதயம் புன்னகைக்க பூக்கள் போதும்.! தொட்டுமலர் தொடுத்தாளே என்றன் மங்கை ….. தோடிராகம் மீட்டிடுதே என்றன் மையல் வட்டுநிலா முகத்தினவள் காதல் சொல்லி Read more