கருது விளைஞ்சிருக்கு!
நெல்லும் விளைஞ்சிருக்கு நெஞ்சும் நிறைஞ்சிருக்கு! அல்லி மலருவொன்னு அங்கே பூத்திருக்கு! துள்ளும் அழகிருக்கு தூண்டில் கண்ணிருக்கு அள்ளி அணைப்பதற்கு ஆசை மிகுந்திருக்கு! வரப்பு வயலோரம் வசந்தம் அமர்ந்திருக்கு கருப்புக் குயிலுவொன்னு காத்துத் தவமிருக்கு! திரும்பும் திசையெங்கும் தீயா நினைப்பிருக்கு குறும்புப் பார்வையிலே கோலம் குடியிருக்கு! கருதும் அறுப்பதற்கு காலம் கனிஞ்சிருச்சு விருந்தும் வைக்கத்தான் வேளை நெருங்கிருச்சு! கரும்பே நாவுன்னைக் கடிச்சுத் தின்னட்டுமா! எறும்பா மாறியுந்தான் எடுத்துச் சுவைக்கட்டுமா!






