புரட்சி எங்கும் வெடிக்கட்டும் – தமிழ்
புலிகள் கூட்டம் கிளம்பட்டும்!
புரட்டுப் பேசும் கூட்டத்தை – அது
புரட்டிப் போட்டே வீழ்த்தட்டும்!

மாற்றம் மண்ணில் மலரட்டும் – நம்
மடமைத் தனங்கள் விலகட்டும்!
ஏற்றம் காண எங்கெங்கும் – புது
எழுச்சிப் பண்கள் ஒலிக்கட்டும்!

உழவுத் தொழிலும் செழிக்கட்டும் – நம்
உள்ளம் மகிழ்ச்சி கொள்ளட்டும்!
வளமாய் நாட்டை மாற்றிடவே – ஒரு
வண்ணத் தமிழன் ஆளட்டும்!

விடையும் காண விரையட்டும் – நல்
வெற்றிக் கனியைப் பறிக்கட்டும்!
குடியால் வீழ்ந்து கிடப்போரும் – தமிழ்க்
குடியைக் காக்க விழிக்கட்டும்!

அடிமை வாழ்வு ஒழியட்டும் – தமிழன்
ஆட்சி பீடம் ஏறட்டும்!
விடியல் கண்ணில் தோன்றிடவே – தமிழ்
வீரம் மண்ணில் விளையட்டும்!

தெளிவும் மனத்தில் தோன்றட்டும் – தமிழ்
தென்றல் காற்றாய் வீசட்டும் !
இழி(ளி)வைத் தடுக்க எழுந்தேவா – மன
இருளும் மறையக் காணட்டும்!


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.

மின்னிதழ்

ஹைக்கூ திண்ணை 13

ஹைக்கூ திண்ணை செப்டம்பர் / ஒக்டோபர் மின்னிதழைத் தொகுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன். இந்தப் பெறுமதியான வாய்ப்பை வழங்கிய கவிச்சுடர் கல்யாணசுந்தரம் ஐயா அவர்களுக்கு முதற்கண் எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகளைச் சமர்ப்பிக்கிறேன். ஹைக்கூ என்றால் என்ன, அதை விளங்கிக் கொண்டு அதன் விதிமுறைகள் பற்றி அறிந்து அதன்படி எழுத எல்லோரும் முனைகின்றார்களா என்பது கேள்விக்குறியே. சிலர் இலக்கண விதிமுறைக்கேற்ப ஹைக்கூ கவிதைகளை எழுதுகின்றனர். ஆனாலும் சிலர் இலக்கண விதிகளைக் கொஞ்சம் மீறிப் புதுமையாக, வித்தியாசமாக எழுதுபவர்களாக இருக்கிறார்கள்...