நெல்லும் விளைஞ்சிருக்கு
நெஞ்சும் நிறைஞ்சிருக்கு!
அல்லி மலருவொன்னு
அங்கே பூத்திருக்கு!
துள்ளும் அழகிருக்கு
தூண்டில் கண்ணிருக்கு
அள்ளி அணைப்பதற்கு
ஆசை மிகுந்திருக்கு!

வரப்பு வயலோரம்
வசந்தம் அமர்ந்திருக்கு
கருப்புக் குயிலுவொன்னு
காத்துத் தவமிருக்கு!
திரும்பும் திசையெங்கும்
தீயா நினைப்பிருக்கு
குறும்புப் பார்வையிலே
கோலம் குடியிருக்கு!

கருதும் அறுப்பதற்கு
காலம் கனிஞ்சிருச்சு
விருந்தும் வைக்கத்தான்
வேளை நெருங்கிருச்சு!
கரும்பே நாவுன்னைக்
கடிச்சுத் தின்னட்டுமா!
எறும்பா மாறியுந்தான்
எடுத்துச் சுவைக்கட்டுமா!


1 Comment

இரவீந்திரன் · டிசம்பர் 13, 2016 at 6 h 39 min

அருமைப் படையலையும் அழகாய்ப் படைத்துள்ளீர்
விருந்து வைத்தெனையும் விரும்பிப் படிக்கவைத்தீர்
கரும்பாய் கற்கண்டாய் கடித்தும் உண்டேனே
கருத்தாய் படித்தநானும் களித்தும் உருகினேனே!

வாழ்க வளத்துடன்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

I மின்னிதழ் I உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பே என்றும் உயர்வாகும்!
உடலை உறுதி ஆக்கிவிடும்!
தழைக்கும் தொழில்கள் நாட்டினிலே
தளரா உழைப்பின் பலனன்றோ!

 » Read more about: உழைப்பாளர்களை உயர்த்துவோம்  »

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

மரபுக் கவிதை

அண்ணா

வினைச்சொல்லாய் வேதியத்தின் இருள கற்றி
விடியல்தர வந்துதித்த கதிர வன்நீ!
முனைச்சொல்லாய்க் கூர்படைத்த கூர்ப டைத்துக்
குத்தீட்டிச் சொல்வடித்த உலைக்க ளம்நீ!
பிணைச்சொல்லாய்ப் பிரிந்துபட்ட தமிழி னத்தைப்
பேரினமாய்த் திரளவைத்த பெருந்தி றம்நீ!

 » Read more about: அண்ணா  »