குளமுமே வத்திப் போச்சு
குடிக்கவோ தண்ணி இல்ல! – இப்ப
நிலமுமே காஞ்சு போச்சு
நிலத்தடி நீரு மில்ல!

விளச்சலும் குறைஞ்சு போச்சு
விளைநிலம் வீடா ஆச்சு – நல்ல
மழையுமே பெய்ய வில்ல
மனசுமே உடைஞ்சு போச்சு!

நீரோடும் ஆறு மிங்கே
நீரின்றி வறண்டு போச்சு – செழித்த
ஏரோடும் நிலத்தக் காணோம்
எல்லாமே மாறிப் போச்சு!

மரத்தயும் வெட்டி யாச்சு
மண்வளம் கெட்டுப் போச்சு! – செயற்க
உரம்பூச்சிக் கொல்லி யாலே
உணவுமே நஞ்சாப் போச்சு!

சூழலும் கெட்டுப் போச்சு
சுரண்டலும் அதிக மாச்சு – நாட்டுல
ஊழலும் பெருகிப் போச்சு
உண்மயும் மறைஞ்சு போச்சு!

ஆறெல்லாம் கழிவா போச்சு
அழகுமே அத்துப் போச்சு – இங்க
ஊரெல்லாம்  பாழாப் போச்சு
உலகமே மாறிப் போச்சு!

மணல்கொள்ள அடிக்கு றாங்க
மதுவத்தான் குடிக்கு றாங்க – காடு
வனமெல்லாம் அழிக்கு றாங்க
வளத்தெல்லாம் கெடுக்கு றாங்க!

உரிமைய தட்டிக் கேட்டா
உதச்சுமே விறட்ட றாங்க – ஆள்வோர்
எரியுற நெருப்பில் தானே
எண்ணெய ஊத்து றாங்க!


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

I மின்னிதழ் I உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பே என்றும் உயர்வாகும்!
உடலை உறுதி ஆக்கிவிடும்!
தழைக்கும் தொழில்கள் நாட்டினிலே
தளரா உழைப்பின் பலனன்றோ!

 » Read more about: உழைப்பாளர்களை உயர்த்துவோம்  »

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.