பணஞ்சேர்க்க எண்ணுவரே அதிக முண்டு !
பணமின்றிச் செயமுடியும் செயலு முண்டு !
குணமிருந்தும் பணமின்றி இருப்போ ருண்டு !
கொள்கையிலே தோல்வியினைக் கண்டோ ருண்டு !
பணமிருந்தும் நிறைவேதான் காணா ருண்டு !
பண்பாட்டை மீறுகிற நபரு முண்டு !
அணங்கைத்தான் விரும்புகிற அணங்கு முண்டே !
ஆசைகளுக் களவில்லை என்பா ருண்டு !

நீருக்குள் வாழ்கின்ற உயிர்கள் உண்டு !
நேயத்தால் குறைகாணா திருப்ப குண்டு !
பாருக்குள் புகழுக்காய் வாழ்வோ ருண்டு !
பயன்கருதிச் செய்பவரே நிறைய உண்டு !
சேருமெனச் செய்வதிலும் மாற்றம் உண்டு !
செயும்நல்லச் செயல்களிலும் துன்ப முண்டு !
யாருக்கும் தவறுவரும் என்பா ருண்டு!
எப்போதும் நல்வழியில் நிறைவே உண்டு !


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

I மின்னிதழ் I உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பே என்றும் உயர்வாகும்!
உடலை உறுதி ஆக்கிவிடும்!
தழைக்கும் தொழில்கள் நாட்டினிலே
தளரா உழைப்பின் பலனன்றோ!

 » Read more about: உழைப்பாளர்களை உயர்த்துவோம்  »

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.