உண்டு!
பணஞ்சேர்க்க எண்ணுவரே அதிக முண்டு ! பணமின்றிச் செயமுடியும் செயலு முண்டு ! குணமிருந்தும் பணமின்றி இருப்போ ருண்டு ! கொள்கையிலே தோல்வியினைக் கண்டோ ருண்டு ! பணமிருந்தும் நிறைவேதான் காணா ருண்டு ! பண்பாட்டை மீறுகிற நபரு முண்டு ! அணங்கைத்தான் விரும்புகிற அணங்கு முண்டே ! ஆசைகளுக் களவில்லை என்பா ருண்டு ! நீருக்குள் வாழ்கின்ற உயிர்கள் உண்டு ! நேயத்தால் குறைகாணா திருப்ப குண்டு ! Read more

