சிலைபோல் மேனி சிரித்தால் பூ நீ
சிந்தனை வளைக்குதடி – கடல்
அலைபோல் உந்தன் நினைவே எந்தன்
அடிமனம் துளைக்குதடி

கண்ணே உன்னைக் காணக் காணக்
கனவுகள் வளருதடி – என்
திண்மை மனமும் சேயிழை உன்னால்
தேய்ந்தே தளருதடி

கனியே உந்தன் மதிமுகம் கண்டால்
காலம் மறக்குமடி – எந்தக்
கனிந்த நல்ல துறவியின் மனமும்
துறவைத் துறக்குமடி

கறுப்பே களையாம் யாரோ சொன்ன
கருத்தும் உண்மையடி – நீ
விருப்பத் தோடே பேசி மகிழ
வரணும் அண்மையடி

முதலில் என்னைக் கண்ட போதுன்
முகமே மலர்ந்ததடி – பின்
இதயம் மகிழ நிதமும் சிரிப்பே
இதழில் தவழ்ந்ததடி

எவரே மகிழ்வார் இதுபோல என்றே
இதயம் நிறையுதடி – உன்
கவரும் கிளிமொழி கேட்டால் நெஞ்சக்
கவலை மறையுதடி


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

I மின்னிதழ் I உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பே என்றும் உயர்வாகும்!
உடலை உறுதி ஆக்கிவிடும்!
தழைக்கும் தொழில்கள் நாட்டினிலே
தளரா உழைப்பின் பலனன்றோ!

 » Read more about: உழைப்பாளர்களை உயர்த்துவோம்  »

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.