விருத்தப்பா
தென்றலுமே தீண்டிடவே சிலிர்கும் பூக்கள்
….. சிங்காரங் குறையாது சுரக்கும் தேனை
சென்றமர்ந்து வண்டுகளும் சுவைக்கு மன்றோ
….. சிறகுகளால் மகரந்த சேர்க்கை பூவில்!
தன்காம்பில் காய்கனிகள் தோன்ற பூக்கும்
….. தன்னிழலில் பசியாற உதவும் பாரீர்!
என்னற்ற மலர்களெல்லாம் வாசம் வீச
….. என்னிதயம் புன்னகைக்க பூக்கள் போதும்.!
தொட்டுமலர் தொடுத்தாளே என்றன் மங்கை
….. தோடிராகம் மீட்டிடுதே என்றன் மையல்
வட்டுநிலா முகத்தினவள் காதல் சொல்லி
….. வாட்டமெல்லாம் போக்கியவள் இன்பம் தந்தாள்
சொட்டுமழை நனைத்திடுதே தேகம் எல்லாம்
….. சொகுசுகட்டில் சேர்வாளே எனைய ணைந்து
கட்டுண்டு காலங்கள் நகர்த்தித் தூங்க
….. காளையெனை புன்னகைக்க தூவும் பூக்கள்.!
தாவணியில் எனைமயக்கும் விழிவேல் கொண்டு
….. தங்கமகள் நடையினிலே வீழ்த்த என்னை
ஆவணியில் தாலிகட்ட மனமோ ஏங்க
….. ஆவரப்பூ கூந்தலேறி வாசம் சூழ
காவலையும் தாண்டிவந்து மணமு டிக்க
….. காதலாலே காத்திருக்கும் மாமன் நானே
ஆவலுடன் வந்திடுவேன் உன்னைச் சேர
….. ஆதிரையே புன்னகைக்க பூக்கள் சிந்து.!
தென்றலெனை தீண்டிடாது தீண்டு நீயும்
….. தேகமெல்லாம் சிலிர்க்குதடி சிந்தை யுள்ளே
கொன்றைமலர் சின்னவளே சிவந்த பெண்ணே
….. கொல்வதென்ன மௌனத்தால் கனக்கும் நெஞ்சு
வன்முறையும் ஆயுதங்கள் தாங்கும் மேனி
….. வான்மழையாய் குளிர்விக்கும் கண்கள் ரெண்டும்
சின்னவளே புன்னகைக்கா பூக்க ளுண்டோ
….. சிங்காரப் புன்னகையாள் பூக்கள் பூக்க..!
1 Comment
ezhil · அக்டோபர் 18, 2016 at 14 h 43 min
Super man are!!