கவலைக்குரிய காலமாற்றம்!
ஒற்றைச் சேலையில் தாலாட்டுக் கேட்ட ஒருதாய் வயிற்று உறவுகளெல்லாம் ஒன்றுவிட்ட சகோதரர்கள் போலானது ! ஒரு பாயில் தூக்கம் பகிர்ந்த ஒன்றுவிட்ட சோதர சொந்தங்கள் தூரத்து உறவு என்றானது! ஒரே முற்றத்தில் கூடிநின்று பாசத்தை பரிமாறிய சொந்தமெல்லாம் பக்கத்து ஊர் பழகிய மனிதர்களைபோல போனது! உற்றார் சுற்றத்தார் எல்லாமே யாரென்று கேட்கும் நிலைக்கு பாசம் பச்சையம் இழந்துவிட்டது! ஆமாம்! பணம் அழைப்பு விடுக்கிறது பணத்துக்கு மட்டும்! வரவேற்று பந்தி பரிமாறுகிறது. Read more









