கவிதை

உன்ன யெண்ணி ஏங்க வச்சே

நான் கோயிலுக்கு
நடந்து போகயிலே

எந்தன் எதிரே வந்து
தரிசனம் தந்தவளே

நான் முதல் முதலா
உன்னை பார்த்தேன்

எந்தன் விழிகளிலே
உன்னை சேர்த்தேன்

காதலோடு பூவெடுத்து
பூமாலை கோர்த்தேன்

நெத்தியில நீதானே
பொட்டு ஒன்னு வைச்சே

ஊசி நூலு இல்லாம
ஏன்டி எம்மனச தைச்சே

ஏறெடுத்து பார்த்தில்ல
நான் இதுவரை பெண்ணே

தினமும் உன்னயெண்ணி
ஏங்க வச்சே ஏன்டி கண்ணே!

 » Read more about: உன்ன யெண்ணி ஏங்க வச்சே  »

கவிதை

பிரேம் _ன் ஹைக்கூ துளிகள்

அனாதையாக கிடக்கிறார்
கோடிகளின் அதிபதி
சாலை விபத்து  !

பயண களைப்பு
நிழல் தேடுகிறான்
விறகுவெட்டி  !

சாலையில் பணப்பை
மரித்து போனது
மனசாட்சி  !

 » Read more about: பிரேம் _ன் ஹைக்கூ துளிகள்  »

கவிதை

என்னவளே

நான் இமைகள் மூடி பலமுறை திறக்கிறேன் என் இதயத்தில் உன்னை ஓயாமல் பார்க்கின்றேனே... நான் தூக்கத்தை தொலைத்தேனே துரும்பாய் இளைத்தேனே...

கவிதை

என் வீட்டு இளவரசி

உன்னோடு கொஞ்சி துள்ளி விளையாடவே விண்மீன்கள் ரெண்டும் ஓடி வந்து உந்தன் விழிகளுக்குள் ஒளிந்ததோ ! வெள்ளி நிலவே உன்ன தாலாட்டவே வானவில் அந்தரத்தில் ஊஞ்சல் கட்டி தொங்குதோ !