ennavaleஎன் எதிரே வந்தவளே
விழிகளில் நுழைந்து
எந்தன் இதயத்தை
பறித்து சென்றவளே…

தினமும் உன்னை காணாமலே
என் விழிகள் ஏங்குது மானே…

நான் இமைகள் மூடி
பலமுறை திறக்கிறேன்
என் இதயத்தில் உன்னை
ஓயாமல் பார்க்கின்றேனே…

நான் தூக்கத்தை தொலைத்தேனே
துரும்பாய் இளைத்தேனே…

அடியே பெண்ணே ஓடோடி
வருவாயா காதலை சொல்லிட
எந்தன் முன்னே…