படுத்திருந்தும்
உறக்கமில்லை
காலி பானை!


மழலை தந்த முத்தம்
குழந்தையாக மாறினாள் அன்னை


வாகனத்தை முந்தி சென்றான்
வாழ்க்கை அவனை முந்திசென்றது
சாலை விபத்து


கட்டுக்கடங்கா வேகத்தை
கட்டுபடுத்தியது மரணம்
சாலைவிபத்து


தேன் சுரக்கும்
அக்ஷய பாத்திரம்
இதழ்கள்


திரைகடல் ஓடி வந்தது
திரவியம் தேடித்தான்
திரவமானது வாழ்க்கை


இல்லறத்தின் கதவு
சாத்தப்பட்டது முதலிரவோடு
அழைப்பிதழாக வந்தது விசா


வாழ்க்கையின் வெளிச்சம்
இரு வருடமே
கையெழுத்தானது ஒப்பந்தம்
வெளிநாடு வேலை