நான் கோயிலுக்கு
நடந்து போகயிலே

எந்தன் எதிரே வந்து
தரிசனம் தந்தவளே

நான் முதல் முதலா
உன்னை பார்த்தேன்

எந்தன் விழிகளிலே
உன்னை சேர்த்தேன்

காதலோடு பூவெடுத்து
பூமாலை கோர்த்தேன்

நெத்தியில நீதானே
பொட்டு ஒன்னு வைச்சே

ஊசி நூலு இல்லாம
ஏன்டி எம்மனச தைச்சே

ஏறெடுத்து பார்த்தில்ல
நான் இதுவரை பெண்ணே

தினமும் உன்னயெண்ணி
ஏங்க வச்சே ஏன்டி கண்ணே!

நீ என்னோடு சேர்ந்த
நீங்காத சொந்தமடி

ஏழேழு ஜென்மங்கள்
தொடரும் இந்த பந்தமடி!