அனாதையாக கிடக்கிறார்
கோடிகளின் அதிபதி
சாலை விபத்து  !


பயண களைப்பு
நிழல் தேடுகிறான்
விறகுவெட்டி  !


சாலையில் பணப்பை
மரித்து போனது
மனசாட்சி  !


வாழ்க்கை பயணம்
புதிய தேடல் ஆரம்பம்
முதலிரவு   !


திரும்பி பார்க்காத தொகுதி
திருந்திவிட்ட மக்கள்
தேர்தல் புறக்கணிப்பு


சர்க்கரை இருப்பு இல்லை
காட்டிக்கொடுத்தது
கூட்டமாய் எறும்புகள்


நிலாச்சோறூட்டும் அம்மா
நித்தம் ஏங்கும் சிறுவன்
எதிரிலே அனாதை விடுதி


படமெடுக்கத்தான் வந்தது
யாரும் முன்வரவில்லை
கருநாகம்