20160317_2034வாடுது வாடுது
எம்மனசு இங்கே
உன்னை நினைத்து வாடுது …

தேடுது தேடுது
எந்தன் விழிகள்
கனவில் உன்ன தேடுது …

ஆடுது ஆடுது
காதலை சொல்லி
மனசு கூத்தாடுது …

கூடுது கூடுது
வான் மேகங்கள்
பூ மழை தூவ கூடுது …

நாடுது நாடுது
மழைத் துளியில்
சேர்ந்து நனைந்திட …

உந்தன் வரவை
என்னுள்ளம் நாடுது …

பாடுது பாடுது
என்னை தேடி
நீ வந்ததுமே …

எந்தன் நெஞ்சம்
காதல் ராகம் பாடுது …