என் வீட்டு முல்லைக்கொடி
நீ சிரிக்கும் போது சில்லரையாக
முத்து பவளம் கொட்டுமடி !
பூந்தளிரே நீ மழலை பருவமே
என் அன்னையின் மறு உருவமே !
உன்னோடு கொஞ்சி
துள்ளி விளையாடவே
விண்மீன்கள் ரெண்டும்
ஓடி வந்து உந்தன்
விழிகளுக்குள் ஒளிந்ததோ !
வெள்ளி நிலவே
உன்ன தாலாட்டவே
வானவில் அந்தரத்தில்
ஊஞ்சல் கட்டி தொங்குதோ !
செம்பருத்தி பூவு உந்தன்
செவ்விதழில் முத்தமிட்டு
தேன் சேகரித்து போக வந்ததோ !
தவமாய் தவமிருந்ததாலே
பொக்கிஷமாக கிடைத்த
தங்க ரதம் நீயல்லவா !
பல்லக்கில் உன்னை
தூக்கி சுமந்து கொண்டு
பவனி வரும் தந்தை நானல்லவா !
மரபுக் கவிதை
உழைப்பாளர்களை உயர்த்துவோம்
I மின்னிதழ் I உழைப்பாளர்களை உயர்த்துவோம்
உழைப்பாளர்களை உயர்த்துவோம்
உழைப்பே என்றும் உயர்வாகும்!
உடலை உறுதி ஆக்கிவிடும்!
தழைக்கும் தொழில்கள் நாட்டினிலே
தளரா உழைப்பின் பலனன்றோ!