ஹைக்கூ
ராஜகவி ராகில் – கவிதைகள்
பெண் விடுதலை பற்றி
பேசியவன் பையில்
வீட்டுச் சாவி
ஓடையாக இருந்தாலும்
உன்னை நதியாக்குகிறது
நம்பிக்கை
நம்பிக்கை உதிர்கின்ற போதுதான்
நிகழ்கிறது
முதல் மரணம்
நிலம் உழுகின்ற
உழவனைகிழித்து விடுகிறது
சமூக ஏர்
பூமிக்கு மேல்
புதை குழி
கட்டில்
உழவனை
நிமிர்ந்து பார்க்க மறுக்கிறது
நெற்கதிர் கூட
ஏழையைச் சாப்பிட்டு
ஏப்பமிடுகிறது
சோறு