தமிழ் அமுதம்
அளவுக்கு மீறி அருந்தினாலும்
நீ
உயிர்ப்பாய்
இன்னும் இன்னும்
தமிழ் மங்கைக்கு
கவிதைச் சேலை கட்டுகிறேன்
அவள் அழகு
திருஷ்டி படாமலிருக்க
தமிழ்
பசு
இலக்கியப் பால் கறக்கிறேன்
கவிதைத் தயிர்
சுவைக்க
தமிழ்
சாகரம்
நான் செல்கிறேன்
எழுதுகோல் தோணி
செலுத்தி
தமிழ் மான்
அது
துள்ளிவிளையடுகின்ற
காடு
நீயும்
நானும்
இறைவா
வேண்டும்
தமிழ்க் கடலில்
நான்
ஒரு மீனாகும் வரம்
அன்னை மொழி
மறந்தவன்
வீட்டுச் சேவல் கூட
நரி
மூச்சுக்கள் ஒன்றாகிடின்
யுகம்
யுகமாய்ச் சுவாசிப்பாள்
தமிழ் அன்னை
தமிழ்
செல்வம் என்பவன்
காப்பான்
தன்
உயிர் கொடுத்தும்.