காட்டழகி! என் வீட்டழகி!
நாவல் பழ நிறத்தழகி நாயுருவிக் கண்ணழகி-நான் ஆவல் படும் அழகெல்லாம் அடங்கி நிற்கும் பேரழகி சேவல்க்கோழி கொண்டையென சிவந்திருக்கும் உதட்டழகி-உன் பாலைப்பழச் சொல்லுக்கு காளை மனம் ஏங்குதடி! நீர்முள்ளி போலவுந்தன் நீள்மௌனம் தைத்தாலும் மூங்கில் முளை புன்னகையே என் முழுநேர நினைப்பாச்சே! ஆளில்லா ஊருக்கு இலும்பைப்பு சக்கரையாம்! நீயில்லா மனத்துக்கு கண்ணீரே கவிதைகளா? மட்பாண்டம் தாங்கி-நிற்கும் அட்டாளை போல உளமாசைகளை அடுக்கி வைத்து காத்திருக்கு பேரழகே! புயலாக உன் பதிலோ Read more
