நாவல் பழ நிறத்தழகி
நாயுருவிக் கண்ணழகி-நான்
ஆவல் படும் அழகெல்லாம்
அடங்கி நிற்கும் பேரழகி
சேவல்க்கோழி கொண்டையென
சிவந்திருக்கும் உதட்டழகி-உன்
பாலைப்பழச் சொல்லுக்கு
காளை மனம் ஏங்குதடி!
நீர்முள்ளி போலவுந்தன்
நீள்மௌனம் தைத்தாலும்
மூங்கில் முளை புன்னகையே
என் முழுநேர நினைப்பாச்சே!
ஆளில்லா ஊருக்கு
இலும்பைப்பு சக்கரையாம்!
நீயில்லா மனத்துக்கு
கண்ணீரே கவிதைகளா?
மட்பாண்டம் தாங்கி-நிற்கும்
அட்டாளை போல
உளமாசைகளை அடுக்கி
வைத்து காத்திருக்கு பேரழகே!
புயலாக உன் பதிலோ
பிடுங்கிச் சரிக்காமல்
பூவாகி என் நெஞ்சில்
சாய்வதற்கு வா அன்பே!
வாகைக்காட்டான்