என் காதலை
வலிமைப்படுத்தவே
எளிமைப்படுத்தி எழுதுகிறேன்
உனக்கான பாடலை.

…..

நான் புல்லாங்குழல்
உன் காற்றை
என்னில் செலுத்து
காதல் இசை
கவிதையாகும்.

…..

உன் காதலை அல்ல
உன்னையே பெறுவதற்காய்
தவமாய் தவமிருக்கிறேன்.