உனக்கான திசை நோக்கி
என் எழுத்துக்கள் உதிர்கின்றன
அவை பிறந்த நேரம் இனிமையானவை
பிரசவ வலியின் வேதனை நீ அறியமாட்டாய்
எனக்குள் மூடி வைத்து இருக்கும்
என் வலிகள் அவை..

முதல் முதலாய் என் உணர்வில்
உதிர்ந்தவை
இந்த பிரபஞ்சத்தில் ஒலிக்கும்
பல சொற்களின் கலவையாக
காற்றில் கலந்து விடலாம்
காலம் பதில் உதிர்க்கலாம்…

என் எழுத்துக்கள் ஏட்டில் தானே
என அலட்சியப்படுத்தாதே..
அவை என் நாட்குறிப்புகளின்
முக்கிய பதிவுகள்
மலையளவு உயரத்திற்கு  ஒப்பானது.
அங்கு நிகழ்ந்த உரையாடல்கள்
குரல்கள் உடைந்து விடலாம்
கூடவே கடதாசிகள் கிழிக்கப்படலாம்

என்னில் பிரதிபலித்த என் உணர்வுகள்
விலை மதிப்பற்றவை
எனக்கான ராஜ்ஜியத்தில்
படைக்கப்பட்ட பிரம்மனின்
பிரம்மாண்டங்கள்..
கோர்வையாய் உதிர்கின்றன
என் எழுத்துக்களாய்…
அவை உன்னுடன் வாழ்ந்த
ஒவ்வொரு இன்ப துளிகளுக்காய்
படைக்கப்பட்டனவா..?
அல்லது உனக்காக சிதறி எறியபட்ட
வேதனைகளின்
சிதறல்களா..?

நான் குளிர் காய்கின்றேன்
அதன் பிறப்பில் …!!!


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

Related Posts

மரபுக் கவிதை

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

I மின்னிதழ் I உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பே என்றும் உயர்வாகும்!
உடலை உறுதி ஆக்கிவிடும்!
தழைக்கும் தொழில்கள் நாட்டினிலே
தளரா உழைப்பின் பலனன்றோ!

 » Read more about: உழைப்பாளர்களை உயர்த்துவோம்  »

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.