மரபுக் கவிதை

உழவுத் தோழன்… (மண்புழுக்கள்)

மண்மகள் மடியில் உழன்றாடி
மழைமேகத் துளியில் உடல்நீராடி
மக்கியத் தழைகளில் விருந்தோம்பி
மண்ணைப் பொன்னாக்கும் அபரஞ்சி

வளை உருளையாய் நீள்கொண்டு
தசை நார்களால் இடம் பெயரும்
இனம் நிலைக்க கிளைடெல்லம்
இடை துண்டாயின் மீள்கொள்ளும்

ஏர்முனை துணையாய் முன் உழுது
வேர்முனை சுவாசம் சீராக்கி
போரடிக்கும் களத்தை மிருதாக்கி
நீரோட்டம் பயத்திடும் மண்ணுயிரி

மரித்த மண்ணை உயிர்த்திடும் சஞ்சீவி
களிமண் குழைவை முறித்திடும் காஞ்சுகி
வேர்காய்ப்பை தணிக்கும் பஞ்சக்கிருதி
கார்பொழிவில் மண்ணரிப்பை தடுக்கும் பஞ்சமி

ஆண்பெண் அற்ற அர்த்தநாரீ
அகிலம் காக்கும் சுவீகாரி
அரை இருபக்கச் சமச்சீர் உடலி
அயனவன் படைப்பில் கொடையாளி

உழவனின் உண்மை உதவிக்கரம்
உக்கிரமாய் உயர்த்தும் மண்ணின் தரம்
உகமகள் ஊழியனாய் உச்சவரம்
உச்சிட்ட உண்டையாய் மண்புழுஉரம்

பாரதத்தின் மண்புழுக்கள் பலநூறு ரகம்
அறுவகையே பயன்தரும் மண்புழுஉரம்
முறையாய் காப்பின் மண்வளம் பெருகும்
மூன்று போகமும் மகசூல் அரும்பும்

வளைதசைப் புழுக்களைப் பெருக்கிடுவோம்
மண்புழுஉரங்கள் உற்பத்தி செய்திடுவோம்
பொன்பொருள் சந்ததிகளுக்கு சேர்ப்பதைவிட
மண்வளம் குன்றாது வளம் காத்திடுவோம்!

 » Read more about: உழவுத் தோழன்… (மண்புழுக்கள்)  »

புதுக் கவிதை

விதைக்க மறந்த மனித நேயம்

1.
எந்தேசம் எங்கேபோ கிறது சொல்லு
… இழிநோக்கி நகரத்தான் மனிதம் என்றா
சந்தையென கல்வியாகி திருட்டுக் கொள்ளை
… சாதிமத சண்டைகளும் மனிதம் கொல்ல
எந்ததிசை போகிறது மக்கள் கூட்டம்

 » Read more about: விதைக்க மறந்த மனித நேயம்  »

மரபுக் கவிதை

தமிழாய் வாழ்ந்த தண்டமிழ் பாரதி

ஆங்கிலேயன் ஆட்சிசெய்த அடிமை மண்ணில்
      அருங்கவிஞர் பாரதிதான் வாழ்ந்தி டாமல்
பாங்கான புதுச்சேரி மண்ணில் வாழ்ந்து
      பாரதத்து விடுதலையின் உணர்வை ஏற்றும்
தீங்கனலில் கவிதைகளை இயற்றி வந்த
 

 » Read more about: தமிழாய் வாழ்ந்த தண்டமிழ் பாரதி  »

கவிதை

பாதமே வேதம்

உந்தன் பாதம்
எந்தன் வேதம்,
உந்தன் கொலுசு
எந்தன் இன்னிசை.

ஆடும் கால்கள்
ஆனந்த ஊற்று,
ஓடும் பரல்கள்
உயிரின் ஓசை,

வண்ணப் பூச்சு
வடிவின் வீச்சு,

 » Read more about: பாதமே வேதம்  »

மரபுக் கவிதை

தை மகளே பொங்கி வா

மார்கழிப் பனிப்பொழிவு மெல்லக் குறைந்திட
ஊர்முழுதும் செங்கரும்புகள் காட்சியளிக்க
வார்த்தெடுத்த புதுப்பானைகள் பொலிவாக
சேர்குழலியாய் தைமகள் தரணி வருகிறாளே…

மழைமகள் குறைவாக அருளிய மழையிலும்
பிழையில்லா விளைச்சல் நெல் வீடு வரவே
உழைத்த உழைப்பின் பயன் உழவருக்கென்றாக
பிழைக்கும் பிழைப்புக்கு நன்றி சொல்லிடவே…

 » Read more about: தை மகளே பொங்கி வா  »

மரபுக் கவிதை

பொங்கல் வாழ்த்து

தழைக்கவே வந்தாள் தரணியில் தைப்பெண்
தமிழும் செழிக்கத் தலைமகள் வந்தாள்!
எங்கும் பொதுமை ஏற்கும் வண்ணம்
தங்க ஒளியை தந்த கதிரோன்!
பொங்கும் மகிழ்வு புதுப்புதுப் பானையில்
பொங்கலோ பொங்கல் பூமிப் பந்தில்!

 » Read more about: பொங்கல் வாழ்த்து  »

புதுக் கவிதை

வீடுபேறு உடைய வீடு

கிளைகள் அடர்ந்த தனிமரம்தான் அது
தன் விழுதுகளை நம்பியே
நிமிர்ந்து நிற்கும் அரைநூற்றாண்டாக …

அதன்கிளைகள் மேல் பசிய இலைகளாகப் படர்ந்தன கிளிகள்…
லட்சோபலட்சம் பைங்கிளிகளின்
ஆராவாரிக்கும் சப்தம் எண்திசையெங்கும் பறக்கச் செய்கிறது.

 » Read more about: வீடுபேறு உடைய வீடு  »

இலக்கணம்-இலக்கியம்

காலமெல்லாம் தமிழ்

தமிழில் ஹைக்கூ கவிதைகள்

ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியத் தொன்மைமிகு செம்மொழித் தமிழ் வளமையுடன் காலம் காலமாய்ப் பொலிவோடு பயணித்துக் கொண்டிருக்கிறது. இயல் இசை நாடகம் என முத்தமிழில் மொழியின் பரிணாமத்தை காலமெல்லாம் கண்டும் கேட்டும் படித்தும் உணர்ந்தும் மகிழ்வெய்தும் உலகின் கோடான கோடி தமிழ் நெஞ்சங்கள்,

 » Read more about: காலமெல்லாம் தமிழ்  »

மரபுக் கவிதை

கண்மணியே நீவாழி!

மணமுடித்த மங்கையே நீவாழி!
மங்கலம்நிறை தங்கையே நீவாழி!
கனவுயாவும் நிறைவேறி நீமகிழ
காட்சிதரும் கண்மணியே நீவாழி!

புகுந்தவீடு புகழ்பெற்றல் போலுனது
பிறந்தவீடு மனமகிழவும் செய்திடணும்,
கண்ணிறைந்த கணவனவன் செயல்களிலே
கட்டாயம் உன்விருப்பம் கலந்திடணும்.

 » Read more about: கண்மணியே நீவாழி!  »

ஹைக்கூ

துளிப்பா

  • சொல்லித்தந்தப் பாடம்
    பதியவில்லை மனதில்
    ஆசிரியை முகம் !
  • எங்கள் வீட்டு தோட்டத்தில்
    மலராத மொட்டு
    முதிர்கன்னி.
  • வீட்டுவாசல் வந்து
    முழம்போட்டுத் தருகிறாள்
    பூக்காரி
  • குறைந்த கூலி
    அவன் நிறைவடைகிறான்
    முதலாளி.
 » Read more about: துளிப்பா  »