• சொல்லித்தந்தப் பாடம்
    பதியவில்லை மனதில்
    ஆசிரியை முகம் !
  • எங்கள் வீட்டு தோட்டத்தில்
    மலராத மொட்டு
    முதிர்கன்னி.
  • வீட்டுவாசல் வந்து
    முழம்போட்டுத் தருகிறாள்
    பூக்காரி
  • குறைந்த கூலி
    அவன் நிறைவடைகிறான்
    முதலாளி.
  • சிக்கிக்கொண்டேன் அவளிடம்
    கசக்கிப் பிழிகிறாள்
    மனைவி
  • வாசமில்லாமல் நிற்கிறாள் மனைவி
    கையில் காசில்லை வாங்கிதர
    மல்லிகைப்பூ.
  • அழகிய காகிதப்பூ
    எப்போதும் மணம் வீசும்
    பூசிய வாசனைத் திரவியம்
  • அழைக்காமல் வந்ததால்
    சன்னல் கதவைச் சாத்துகிறேன்
    மழை
  • மலரென்று கண்டுக்கொண்டான்
    பார்வையற்றவன்
    நாசிவழி !
  • ரோசா வாடுகிறது
    பார்வையின் சுட்டெரிப்பால்
    சூரியன்.
  • பிறர்க்கு உதவி செய்து
    காலமெல்லாம் அகம் மகிழும்
    தமிழ்நெஞ்சம்
  • கதவைத் திறந்ததும்
    முதல் தரிசனம்
    ஆதவன் வருகை
  • வானம் பார்த்த பூமி
    கிடைத்த வெடிப்புகளில் குடியேறும்
    வயல் எலிகள்
  • போட்டியில் தோற்றேன்
    இருப்பினும் பரிசு கிடைத்தது
    அம்மாவின் முத்தம்
  • அழகிய உலகம்
    எட்டிப் பார்க்க முடிகிறது
    கையில் திறன்பேசி
  • எனது மூச்சு
    விற்பனையாகிறது வீதியில்
    பலூன் விற்பனை
  • காற்றில் நறுமணம்
    கொண்டு வந்தவள்
    அவள்.
  • வண்ணமுகப்புடன் அழகியநூல்
    படிக்க ஒன்றுமில்லை
    படபுத்தகம் !
  • சிந்திய ரத்தமும் வியர்வையும்
    கட்டுக்கட்டாய் கிடக்கிறது
    முதலாளி வீட்டில்.
  • ஜாதிமல்லியை சூடிக்கொண்ட
    மனைவியுடன் கோபப்படுகிறான்
    பகுத்தறிவாளன்.