மேலேயுள்ள ஹைக்கூ திண்ணை 10 இதழின் முகப்புப் பக்கத்தை
சுட்டியால் தட்டி அல்லது டச் செய்து இதழினை தரவிறக்கம் செய்து படிக்கவும்.
நிறைய சிந்தியுங்கள் ஹைக்கூ பிறக்கும்
ஒரு நூற்றாண்டைக் கடந்து ஹைக்கூ கவிதை எழுச்சியோடு நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. வார இதழ்கள், மாத இதழ்கள் காலாண்டு இதழ்கள் மின்னிதழ்கள் முகநூல் புலனம் கீச்சகம் என்று பல வழிகளில் வளர்ந்து வருகிறது. உலகம் முழுவதும் வேகமாக பெருகி வரும் ஹைக்கூ இந்தியாவில் பல மொழிகளையும் ஆக்கிரமித்தாலும் தமிழில் தான் அதிக படைப்பாளிகள் வந்துகொண்டு இருக்கிறார்கள். நிறைய ஹைக்கூ கவிதைகளை எழுதி வருகிறார்கள் புதுக்கவிதைக்குப் பிறகு ஒரு இயக்கமாக உருவாகி ஒவ்வொரு மாவட்டத்திலும் கிளை பரப்பி வருகிறது.
ஹைக்கூ கவிதைகள் எப்படி இருக்க வேண்டும் என்பதில் குழப்பம் வருவதில் அர்த்தமில்லை அவசியமில்லை தேவையுமில்லை. வாழ்ந்த ஹைக்கூ முன்னோடிகள் கவிக்கோ அப்துல் ரகுமான் தி. லிலாவதி, கவிஞர் மித்ரா, நிர்மலா சுரேஷ் போன்றவர்களின் கவிதை களைப் பாடமாக படியுங்கள். நாம் வாழும் காலத்தில் இருக்கின்ற தமிழக மூத்தக் கவிஞர்கள் கவிஞர் அமுதபாரதி கவிஞர் ஈரோடு தமிழன்பன் கவிஞர் அறிவுமதி கவிச்சுடர்
கா. ந. கல்யாண சுந்தரம் கவிஞர் அமரன் கவிஞர் வே. புகழேந்தி கவிஞர் அனுராஜ் கவிஞர் இளையபாரதி கந்தகம் பூக்கள் இவர்களின் கவிதைகளைப் படித்து நுணுக்கங்களை கற்றுக் கொள்ளுங்கள்.
பேர் சொல்ல ஒரு பிள்ளை போல பேர் நிலைக்க ஒரு ஹைக்கூ போதும் ஒரு காட்சியோ இரு காட்சியோ படிப்பவர் மனதைத் தொட வேண்டும். மகுடம் சூட வேண்டும் தமிழில் வெளிவந்துள்ள கவிஞர் அனுராஜ் அவர் களின்… ஹைக்கூ ஓர் அறிமுகம்… என்ற நூல் புதிதாக எழுதும் கவிஞர்களிடம் இருக்க வேண்டிய ஒரு வழிகாட்டி.இப்படித்தான் இருக்க வேண்டும் இவ்வாறு எழுதினால் தான் ஹைக்கூ என்பதை குழப்பாமல் கற்று தெளிவடைய
வேண்டும் நிறைய படியுங்கள் தெளிவு கிடைக்கும் நிறைய சிந்தியுங்கள் ஹைக்கூ பிறக்கும்.
ஹைக்கூ ஓர் அறிமுகம் தமிழ்நெஞ்சம் இணைய தளத்திலும் படித்துத் தெளிவுபெறலாம்.இவ்விதழில் இன்று முகநூலில் எழுதி வருகின்ற
பல ஹைக்கூ கவிஞர்களின் கவிதைகள் இடம் பெற்றுள்ளன. இந்த மின்னிதழில் இடம்பெறும் ஹைக்கூ சென்றியு லிமரைக்கூ ஹைபுன் கட்டுரை என்னை கவர்ந்து இழுத்ததைப்போல உங்களையும் ஈர்த்து வசப்படுத்தும் என்பது உண்மை.
இந்த பத்தாவது ஹைக்கூ திண்ணை மின்னிதழை சிந்தை கவர வடிவமைத்து செம்மையாக செதுக்கி சரியான நேரத்தில் நேர்த்தியாக உங்கள் பார்வைக்கு படிப்பதற்கு கொண்டு வரும் ஐம்பது ஆண்டுகள் தளராத தமிழ்ப்பணியை துடிப்பான இலக்கிய ஆர்வத்தோடு ஆற்றிவரும் தமிழ்நெஞ்சம் அமின் ஐயா அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்து இலக்கிய வானில் சாதனைக் கவிஞராக வாழ்ந்திட பாசமுடன் வாழ்த்துகிறேன்.
இந்த பத்தாவது இதழை உறவாக நேசித்து உண்மையாக வாசித்து கருத்தைப் பதிந்திட வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன்.
என்றும் அன்புடன்
உங்கள்
கவி நிலா மோகன்
5 Comments
Raju Arockiasamy · ஏப்ரல் 1, 2022 at 18 h 20 min
“இந்த மின்னிதழில் இடம்பெறும் ஹைக்கூ சென்றியு லிமரைக்கூ ஹைபுன் கட்டுரை என்னை கவர்ந்து இழுத்ததைப்போல உங்களையும் ஈர்த்து வசப்படுத்தும் என்பது உண்மை.
இந்த பத்தாவது ஹைக்கூ திண்ணை மின்னிதழை சிந்தை கவர வடிவமைத்து செம்மையாக செதுக்கி சரியான நேரத்தில் நேர்த்தியாக உங்கள் பார்வைக்கு படிப்பதற்கு கொண்டு வரும் ஐம்பது ஆண்டுகள் தளராத தமிழ்ப்பணியை துடிப்பான இலக்கிய ஆர்வத்தோடு ஆற்றிவரும் தமிழ்நெஞ்சம் அமின் ஐயா அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்து இலக்கிய வானில் சாதனைக் கவிஞராக வாழ்ந்திட பாசமுடன் வாழ்த்துகிறேன்”
1௦௦% உண்மை… சிறப்பான உழைப்பு… நெஞ்சினிய வாழ்த்துகள்…
Jayanthi Sundaram · ஏப்ரல் 2, 2022 at 6 h 27 min
ஹைக்கூ பற்றி இப்பிடி ஒரு புத்தகம். அசந்து தான் போனேன். ஒவ்வொன்றும் முத்து. அனைத்து கவிதைகளும் சிந்திக்க வைத்தன. திரு சுஜாதா அவர்கள் சொன்னது போல் ஹைக்கூ எழுதுவது அவ்வளவு சுலபமல்ல. அது தவம். “யோசித்து ஹைக்கூ எழுத தோல்வியில் கோபித்து பேனா வறண்டது “
மாலதி. திரு · ஏப்ரல் 3, 2022 at 10 h 32 min
ஹைக்கூ விளக்கம் அருமை.
கவிஞர்.அ.முத்துசாமி · ஏப்ரல் 3, 2022 at 11 h 31 min
பார்த்தேன், படித்தேன், ரசித்தேன், ருசித்தேன், மகிழ்ந்தேன் ஐயா கவிஞர்திலகம் தமிழ்நெஞ்சனாரே !
Tools For Creators · ஏப்ரல் 16, 2025 at 16 h 24 min
I am really impressed with your writing skills and also with the layout to your weblog.
Is that this a paid theme or did you modify it yourself?
Anyway stay up the nice quality writing, it
is uncommon to look a great blog like this one nowadays. Madgicx!