பொங்கல் வாழ்த்து

தழைக்கவே வந்தாள் தரணியில் தைப்பெண் தமிழும் செழிக்கத் தலைமகள் வந்தாள்! எங்கும் பொதுமை ஏற்கும் வண்ணம் தங்க ஒளியை தந்த கதிரோன்! பொங்கும் மகிழ்வு புதுப்புதுப் பானையில் பொங்கலோ பொங்கல் பூமிப் பந்தில்! வந்தது பொங்கல் வளமே ஓங்க! வந்தது கரும்பு வளர்ந்தது வாழை! பழையன கழிவன புதியன பொலிந்தன! மழையெனச் செந்நெல் மண்மேல் குவிந்தன! போகியும் போனது! பொங்கின மனங்கள்! ஏகிய செயல்கள் ஏற்றம் கண்டன! மஞ்சள் செழித்தது! Read more