தழைக்கவே வந்தாள் தரணியில் தைப்பெண்
தமிழும் செழிக்கத் தலைமகள் வந்தாள்!
எங்கும் பொதுமை ஏற்கும் வண்ணம்
தங்க ஒளியை தந்த கதிரோன்!
பொங்கும் மகிழ்வு புதுப்புதுப் பானையில்
பொங்கலோ பொங்கல் பூமிப் பந்தில்!
வந்தது பொங்கல் வளமே ஓங்க!
வந்தது கரும்பு வளர்ந்தது வாழை!
பழையன கழிவன புதியன பொலிந்தன!
மழையெனச் செந்நெல் மண்மேல் குவிந்தன!
போகியும் போனது! பொங்கின மனங்கள்!
ஏகிய செயல்கள் ஏற்றம் கண்டன!
மஞ்சள் செழித்தது! மலர்களும் பூத்தன!
நெஞ்சம் துடித்தது நேசப் பெண்ணிடம்!
மங்கை மலர்மலர் மங்கலம் காட்டும்!
சங்கத் தமிழாய்த் தங்கமவள் மிளிர்ந்தாள்!
பாலும் பொங்கிப் பலாவும் பழுத்ததே
பாலாய்ப் பொழியும் பசுவும் வள்ளலே!
உழவர் நிலத்தை உழுதே விதைப்பர்
உழைப்பால் உரமேற்றி உயர்த்தும் காளை!
மகத்தான நன்றியாம் மாட்டுப் பொங்கல்!
மக்களின் மகிழ்வாம் காணும் பொங்கல்!
வண்ணக் கோலம்! வாழ்த்தும் உள்ளம்
எண்ணம் இனிக்க ஏற்றம் ஏற்கும்!
இந்நாள் போலே இனிமை பெறவே
எந்நாளும் வேண்டி இசைத்தேன் வாழ்த்தே!.
உழைப்பாளர்களை உயர்த்துவோம்
I மின்னிதழ் I உழைப்பாளர்களை உயர்த்துவோம் உழைப்பாளர்களை உயர்த்துவோம் உழைப்பே என்றும் உயர்வாகும்! உடலை உறுதி ஆக்கிவிடும்! தழைக்கும் தொழில்கள் நாட்டினிலே தளரா உழைப்பின் பலனன்றோ! பிழைக்கும் ஏழை உடல்வருத்திப் பெரிதும் உழைப்பர் பசியுடனே! உழைப்போர் நலனைக் காத்திடுவோம்! உதவி செய்தே ஆதரிப்போம்! வயலில் உழைக்கும் விவசாயி வளத்தைச் சேர்க்கும் உழைப்பாளி! அயரா Read more