மரபுக் கவிதை
தை மகளே பொங்கி வா
மார்கழிப் பனிப்பொழிவு மெல்லக் குறைந்திட ஊர்முழுதும் செங்கரும்புகள் காட்சியளிக்க வார்த்தெடுத்த புதுப்பானைகள் பொலிவாக சேர்குழலியாய் தைமகள் தரணி வருகிறாளே… மழைமகள் குறைவாக அருளிய மழையிலும் பிழையில்லா விளைச்சல் நெல் வீடு வரவே உழைத்த உழைப்பின் பயன் உழவருக்கென்றாக பிழைக்கும் பிழைப்புக்கு நன்றி சொல்லிடவே… ஊர்கூடிப் பொங்கல் வீடுதோறும் வைத்திட தேர் ஓடும் வீதியெல்லாம் மாக்கோலம் மிளிர நார் இன்றிப் பூக்களின் அலங்காரம் மனம்மயக்க வேர் ஓடும் தமிழர் திருநாள் பொங்க Read more
