கட்டுரை

சீ… தனம் புலம்பெயர்விலுமா!

பணமென்னும் பிசாசு ஆட்டுகின்ற ஆட்டம்
மனமென்னும் பேதைக்குப் போடுகின்ற தூபம்
விதை போட்டது யாரென்று புரியாத போதும்
புலம்பெயந்தும் திருந்தாத  மந்தையர் கூட்டம்

பெண்ணைப் பெற்றால், வயிற்றில் புளியைக் கரைக்கும் நிலைமை புலம்பெயர்விலுமா!

 » Read more about: சீ… தனம் புலம்பெயர்விலுமா!  »

By கௌசி, ago
சிறுகதை

உறவுகள் அழிவதில்லை…

அப்பா … அங்கே என்ன செய்யுறீங்க ?எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்றீங்க ?

நேத்து தானே அந்த டாக்டர் உங்கள நல்லா ரெஸ்ட் எடுக்க சொன்னார் .. ஆனா நீங்க யார் பேச்சையும் கேட்காம கொல்லைய கொத்திக்கிட்டு இருக்கீங்க …

 » Read more about: உறவுகள் அழிவதில்லை…  »

ஹைக்கூ

குறுங்கவிதைகள்

இந்த வருட
ஒவியப் போட்டியில்
முதல் பரிசு கிடைத்திருக்கிறது
உன் பாதச்சுவடுக்கு.

உன்னை சுமந்து
செல்கிற சந்தோசத்தில்
தேய்ந்து போகிறது
செருப்பு.

ஒடுக்கபட்டவன் என்று
ஒதுக்கியது
சர்க்கார் மட்டுமல்ல
சமுதாயமும் தான்

குப்பைத்தொட்டிதானே என்று
கேவலமாக நினைக்காதீர்
அது பல குழந்தைகளுக்கு
கருவறை

பாவம்!

 » Read more about: குறுங்கவிதைகள்  »

சிறுகதை

நல்லவன்

குமரேசனைக் கண்டாலே பிடிக்காது யசோதாவுக்கு. எப்படிப் பார்த்தாலும் ரெட்டை அர்த்த சினிமா பாடல்களையே முணுமுணுத்துக்கொண்டிருப்பான்.

“மெதுவா மெதுவா தொடலாமா? உன் மேனியிலே என் கை படலாமா?” என்று பாடுவான்.

 » Read more about: நல்லவன்  »

By மலர்மதி, ago
கட்டுரை

இன்றைய உலகில் தடுமாறும் இளையோர்

19 வயது முதல் 35 வயது வரை உள்ள அனைவருமே இளையோர் தான். அது மட்டுமல்லாமல்; துடிப்புடன், பயம் என்பதே இல்லாமல் பல எதிர்ப்புகளையும் தாண்டி முழு ஆற்றலுடன் எந்த ஒரு செயலையும் செய்து முடிப்பவன் இளைஞன்.

 » Read more about: இன்றைய உலகில் தடுமாறும் இளையோர்  »

ஹைக்கூ

நிழல்கள்

1.

வாழும் கடவுளை
வீதியில்
விட்டு விட்டு
கோவிலில் தேடுகிறான்
“இல்லாத கடவுளை ”

2.

நிழல் தரும் மரங்கள் தான்
நிம்மதியை தரும் என்பதை
எப்போது உணர போகிறான் ??

 » Read more about: நிழல்கள்  »

புதுக் கவிதை

மரிக்கொழுந்து

தண்ணிக் கொடமெடுத்து
தனியாகப் போறவளே
தாய்மாமன் நானிரிக்கன்
தாகத்தோட தானிரிக்கன்

தண்ணியூத்த முறையுமில்ல
தாகந்தீர்க்க வழியுமில்ல
மஞ்சக் கயிறு தந்தியன்டா
மரிக்கொழுந்தா வந்திடுவன்

வேகத்தோட நீ பறந்தா
தேகத்தோட வேகுதடி
தாம்பூலம் மாத்த வாறன்
தாமதமாப் போனா என்ன

தாமதிச்சி நான் போனா
பேமிதிச்சிப் போட்டுடுங்கா
பேசாம இருந்து போட்டு
கூசாம வந்து கேளு

தங்கத்துல செம்பு செஞ்சி
தலைக்கிமேல ஒன்ன வெச்சி
தாங்கத்தான் நெனச்சிரிக்கன்
தாரமா நீ வாடி புள்ள

வீரமா நீ பேசக்குள்ள
வீராப்பா இரிக்கி மச்சான்
வேணாண்டு சொல்லிப் போட்டா
வேகி நொந்து தவிச்சிருவன்

பெரு முல்லக் காடிரிக்கி
பெருத்த ரெண்டு ஆடிரிக்கி
கக்கத்துக்க வாடிபுள்ள
பக்கத்தில யாருமில்ல
மாட்டு வண்டி ஓட்டினாலும்
மாசால ஒண்டும் கொறயலகா
மால மகரி நேரமாச்சி
மாட்டப்போடு தூரமாச்சி.

 » Read more about: மரிக்கொழுந்து  »

புதுக் கவிதை

வாழ்வை துறக்க

முடிவில்லா பாதை ஒன்று
என்னை இழுக்க
விடைத்தேடி
நானும் அந்த பாதை கடக்க
அழகாக மங்கை அவள்
அங்கு பூத்திருக்க
அவளின் அழகில்
மயங்கி நானும் பாத்திருக்க
காதல் எனும் கனை ஒன்று
என்னை அடிக்க
பூத்திருந்த மலர் பறித்து
நானும் புன்னகைக்க
பாத்திருந்த மங்கை
அவள் காதலை ஏற்க
காதல் வானில்
இருவரும் சேர்ந்து பறக்க
சதி எனும் விதி ஒன்று
எங்களை கடக்க
துணையாய் பறந்தவள்
காதலெனும் உறவை முறிக்க
அவளின் பிரிவால் நாளும்
எந்தன் இதயம் துடிக்க
கண்கள் கலங்கி
நானும் கவிதை படைக்க
படித்து பார்த்த
அவளின் இதயம் துடிக்க
வானேரி பறந்து விட்டாள்
எந்தன் நினைவை மறக்க
வாழ்வின் முடிவெதுவென
நானும் நினைக்க
காவி கட்டி
அமர்ந்து விட்டேன்
வாழ்வை துறக்க!

 » Read more about: வாழ்வை துறக்க  »