தண்ணிக் கொடமெடுத்து
தனியாகப் போறவளே
தாய்மாமன் நானிரிக்கன்
தாகத்தோட தானிரிக்கன்
தண்ணியூத்த முறையுமில்ல
தாகந்தீர்க்க வழியுமில்ல
மஞ்சக் கயிறு தந்தியன்டா
மரிக்கொழுந்தா வந்திடுவன்
வேகத்தோட நீ பறந்தா
தேகத்தோட வேகுதடி
தாம்பூலம் மாத்த வாறன்
தாமதமாப் போனா என்ன
தாமதிச்சி நான் போனா
பேமிதிச்சிப் போட்டுடுங்கா
பேசாம இருந்து போட்டு
கூசாம வந்து கேளு
தங்கத்துல செம்பு செஞ்சி
தலைக்கிமேல ஒன்ன வெச்சி
தாங்கத்தான் நெனச்சிரிக்கன்
தாரமா நீ வாடி புள்ள
வீரமா நீ பேசக்குள்ள
வீராப்பா இரிக்கி மச்சான்
வேணாண்டு சொல்லிப் போட்டா
வேகி நொந்து தவிச்சிருவன்
பெரு முல்லக் காடிரிக்கி
பெருத்த ரெண்டு ஆடிரிக்கி
கக்கத்துக்க வாடிபுள்ள
பக்கத்தில யாருமில்ல
மாட்டு வண்டி ஓட்டினாலும்
மாசால ஒண்டும் கொறயலகா
மால மகரி நேரமாச்சி
மாட்டப்போடு தூரமாச்சி.
மகரி = சூரிய அஸ்தமன நேரம்