புதுக் கவிதை
மரிக்கொழுந்து
தண்ணிக் கொடமெடுத்து தனியாகப் போறவளே தாய்மாமன் நானிரிக்கன் தாகத்தோட தானிரிக்கன் தண்ணியூத்த முறையுமில்ல தாகந்தீர்க்க வழியுமில்ல மஞ்சக் கயிறு தந்தியன்டா மரிக்கொழுந்தா வந்திடுவன் வேகத்தோட நீ பறந்தா தேகத்தோட வேகுதடி தாம்பூலம் மாத்த வாறன் தாமதமாப் போனா என்ன தாமதிச்சி நான் போனா பேமிதிச்சிப் போட்டுடுங்கா பேசாம இருந்து போட்டு கூசாம வந்து கேளு தங்கத்துல செம்பு செஞ்சி தலைக்கிமேல ஒன்ன வெச்சி தாங்கத்தான் நெனச்சிரிக்கன் தாரமா நீ வாடி Read more
