புதுக் கவிதை
வாழ்வை துறக்க
முடிவில்லா பாதை ஒன்று
என்னை இழுக்க
விடைத்தேடி
நானும் அந்த பாதை கடக்க
அழகாக மங்கை அவள்
அங்கு பூத்திருக்க
அவளின் அழகில்
மயங்கி நானும் பாத்திருக்க
காதல் எனும் கனை ஒன்று
என்னை அடிக்க
பூத்திருந்த மலர் பறித்து
நானும் புன்னகைக்க
பாத்திருந்த மங்கை
அவள் காதலை ஏற்க
காதல் வானில்
இருவரும் சேர்ந்து பறக்க
சதி எனும் விதி ஒன்று
எங்களை கடக்க
துணையாய் பறந்தவள்
காதலெனும் உறவை முறிக்க
அவளின் பிரிவால் நாளும்
எந்தன் இதயம் துடிக்க
கண்கள் கலங்கி
நானும் கவிதை படைக்க
படித்து பார்த்த
அவளின் இதயம் துடிக்க
வானேரி பறந்து விட்டாள்
எந்தன் நினைவை மறக்க
வாழ்வின் முடிவெதுவென
நானும் நினைக்க
காவி கட்டி
அமர்ந்து விட்டேன்
வாழ்வை துறக்க!