ஏற்றம் தரும் வாழ்வில்
மாற்றம் தர வந்தவளே
மாற்றங்களை தந்து விட்டு
ஏமாற்றமும் தந்தது ஏன்?
நீ காற்றில் எனக்காக
தூது விட்ட முத்தமெல்லாம்
என் காதில் இடியின் சத்தமாய்
வந்து விழுவதேன்?
உன் சோகங்களை
என்னுள் புதைத்து விட்டு
என் புன்னகையை
ஏன் பறித்துப்போனாய்!
தேவதையாய் வந்தவள் நீ
காணலாகி சென்றது ஏன்?
வேண்டும் வரம் கேள்
நான் செய்வேன் என்றாயே…
என் அருகே நீ வேண்டும்
வரம் தருவாய் தேவதையே!
2 Comments