1.
வாழும் கடவுளை
வீதியில்
விட்டு விட்டு
கோவிலில் தேடுகிறான்
“இல்லாத கடவுளை ”
2.
நிழல் தரும் மரங்கள் தான்
நிம்மதியை தரும் என்பதை
எப்போது உணர போகிறான் ??
நவீன ரோபோ மனிதன் !!??
3.
பத்து நிமிட சுகம்
பரிசளிக்கும் நரகம்
அப் பாவியாய்
பாழும் பூமியில்
அனாதை தெய்வங்கள் !!!
4.
கட்டிலுக்கு
விலை போனவர்கள்
கண்ணீருக்கு
விற்று விட்டனர்
“அனாதை குழந்தைகள் ”
5.
நத்தை மேல்
வித்தை
கடவுளின் படைப்பு !!
6.
கனவுகளுக்கு சொந்தக்காரி
கடன் கேட்கிறாள்
காதலை
இரவலாக !!!
7.
தடம் மாறி போகலாம் ??!!
பணம் வந்து
மனம் மாற்றுகையில் !!!
8.
எழுத்து பிழை
அழகாய் இருந்தது …?
“முதல் காதலாய் ”
9.
காதலெல்லாம்
கனவான பிறகு
கடவுள் எதற்கு ??
10.
புகை பிடிக்க
ஆசையில்லை
உன் கை
பிடிப்பதை தவிர !!!
11.
கொம்பு சீவி விட்டது
அரசாங்கம்
காளைகளாய்
“களத்தில் இளைஞர்கள்”