இந்த வருட
ஒவியப் போட்டியில்
முதல் பரிசு கிடைத்திருக்கிறது
உன் பாதச்சுவடுக்கு.
உன்னை சுமந்து
செல்கிற சந்தோசத்தில்
தேய்ந்து போகிறது
செருப்பு.
ஒடுக்கபட்டவன் என்று
ஒதுக்கியது
சர்க்கார் மட்டுமல்ல
சமுதாயமும் தான்
குப்பைத்தொட்டிதானே என்று
கேவலமாக நினைக்காதீர்
அது பல குழந்தைகளுக்கு
கருவறை
பாவம்! அவர்கள்
பைத்தியகாரர்கள்
போயும் போயும்
ஒரு நாற்காலிக்காக
அடித்துக் கொள்கின்றனர்.
கொன்று குவித்தது
இராணுவ அரசு
அழுது குமுறியது
தமிழக அரசு
மனதாரச் சிரித்தது
மத்திய அரசு.
குடைக்குள் மழை
எங்கள் வீட்டு
குடிசைகளில்
மூடிமறைத்தாலும்
தெரிந்து விடுகிறது
உன் வெட்கம்
என்னிடம் சொல்லாலே
வந்து செல்கிறது
கனவு.
கோவிலில் சிறப்பு பூஜை
வெளியே கடவுளுக்குதொழுகை
உள்ளே காமத்தொழுகை
உன் விழி தந்த
வலி என் இதயத்தில்
காதலாக
தெருவிளக்கை
தேடிச் செல்கின்றன
இருள்
சாக்கடையிலும்
பூக்கின்றன
ரோஜாமலர்
மரங்களெல்லாம் இறந்துவிட்டன
விலங்குகள் மட்டும்
அனாதையாக……
உன் சிகையில்
சிக்கிக்கொண்டது
என் சிந்தை
உன் கையிலிருக்கும் மெழுகுத்திரியின்
வெளிச்சத்தை விட
ஒளியாய் இருக்கிறது
உன் முகம்
பெண்ணே!
தனியாய் இருக்கும்போது நீ
தயவுசெய்து பாட்டுமட்டும் பாடதே
குயில்தான் எங்கோ
கூவுகிறதோ என்று
வேடன் வந்துவிடுகிறான்.
என்றேனும் ஒரு நாள்
நான் பாடகனாகி விடுவேனென்ற
நம்பிக்கை எனக்கு இருக்கிறது
உன் கொலுசு சொல்லும்
மெட்டை என்னால்
பாடமுடியாதா என்ன!!!
சிலுவை சுமந்த
இயேசுவாய்
முதுகில்
புத்தக மூட்டையோடு
பள்ளி பிள்ளைகள்
என்ன பாவம் செய்தற்காக!!!
உன்னை நிலவென்று
சொல்கிறார்களே
நீ என்ன இரவில் மட்டும்
வந்துபோகும் குடுக்குடுப்பைகாரனா?
வானம் என்றல்லவா நினைத்தேன்
கல்லூரியில் பதில்
சொல்ல முடியாமல்
முழித்த போது தான்
பள்ளியில் அமைதியாய்
இருந்ததற்கு நான் பெற்ற
பாரட்டும் பைவ்ஸ்டாட் சாக்லெட்டும்
1 Comment
vinayaka moorthy · ஜூன் 26, 2017 at 7 h 26 min
aaha… nice one…