அப்பா … அங்கே என்ன செய்யுறீங்க ?எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்றீங்க ?

நேத்து தானே அந்த டாக்டர் உங்கள நல்லா ரெஸ்ட் எடுக்க சொன்னார் .. ஆனா நீங்க யார் பேச்சையும் கேட்காம கொல்லைய கொத்திக்கிட்டு இருக்கீங்க …

சீனு டாக்டர்னா ஆயிரம் சொல்வாங்கப்பா அதுக்காக சும்மாவே இருக்க முடியுமா ??

ப்ளீஸ் ப்பா வீட்டுக்குள்ள போங்க … ரெஸ்ட் எடுங்க …மகன் பேச்சை தட்ட முடியாமல் வீட்டுக்குள் சென்றார் பெரியவர் மருது …

சீனுக்கு அப்பான்னா உசுரு .. அம்மா இல்லாம ஒத்தை ஆளா நின்னு கஷ்ட பட்டு வளர்த்து நல்லா படியா படிக்க வைச்சு நல்ல வேலையில் மகனை நிலை நிறுத்தியவர் … தன் மகனுக்கு அவன் ஆசை படி ஒரு நல்ல பெண்ணையும் திருமணம் செய்து வைத்தார் …. தள்ளாத வயதிலும் தன் மகனின் புது வீட்டு வேலையை இழுத்து போட்டு செய்தார் …. என் மவன் வாழ போற வீடு கண்ட பயல நம்பி கொடுத்தா கெடுத்து புடுவானுங்க அதான் என் மவனுக்காக பார்த்து பார்த்து செய்யுறேன்னு தன் மனசு நிறைஞ்சு செஞ்சவரு .. தன் மவன் வீடு கட்டி முடிச்சும் கூட சும்மாவா இல்லாம கொல்லையில தென்னை போடுறேன் ,வாழை போடுறேன்னு ,கொய்யா போடுறேன்னு எதாவது துறு,துறுன்னு செஞ்சுக்கிட்டே இருப்பாரு …

உடம்புல சுகர், பீ – பீ  இருந்தும் அதை பத்தியெல்லாம் கவலை படாம எப்போதும் சுறு சுறுப்பா இருந்த மனுஷன் … யார் கண்ணு பட்டதோ நல்லா இருந்த மனுஷன் திடீர்னு படுத்த படுக்கையாயிட்டார் … பெரிய ,பெரிய ஆஸ்பிட்டல வச்சும் கூட அப்பாவுக்கு உடம்பு குணம் ஆகலை …சீனு ரொம்ப மனசொடிஞ்சு போனான் … தனக்கு பக்க பலமாய் இருந்த அப்பா , சிங்கமாய் ஓடி , திரிந்த அப்பா பாத்ரூமுக்கு கூட தனியா போறதுக்கு கஷ்ட படுறதை கண்டு ரொம்ப தேம்பி, தேம்பி அழுதான் சீனு …

சிறிய வயதில் தான் அசிங்கம் செய்தாலும் அதை மனமுவந்து சுத்தம் செய்யும் அப்பாவை இப்போது ஒரு சிறிய குழந்தையாய் நினைத்து கொண்டு எல்லாத்தையும் விருப்பப் பட்டு செய்தான் … என் அப்பா பழைய மாதிரி நல்லா படியா ஆயிடனும்னு அனு தினமும் ஆண்டவனை வேண்டினான் சீனு… நல்லவர்களை தான் அந்த பொல்லாத கடவுள் சோதிக்கும் என்பார்கள், ரொம்ப நல்லவர்களை அந்த  கடவுள் ரொம்ப ரொம்ப சோதிப்பான்  என்பது சீனு வாழ்க்கையில் ஊர்ஜிதமானது …

ஆம் மருது இறந்து போனார் .. அப்பாவின் இறப்பு சீனுவின் சந்தோசத்தை பறித்து சென்றது …. அவனது  வாழ்க்கையே சூன்யமாய் தெரிந்தது ….

சில வருடங்களுக்கு பிறகு ….

ஊரே வெயில் கொடுமையில் அவதி பட்டாலும் சீனுவின் வீடு மட்டும் குளு ,குளு வென்று இருந்தது .. கொல்லை   கதவை திறந்தாலே காற்று தென்றலாய் வீசியது …

கொல்லையில் தென்னையும் ,வாழையும் பெரிதாய் வளர்ந்து நின்றன …மல்லி ,செம்பருத்தி ,கனகாம் பரம் ,சாமந்தி என்று கொல்லைப்புறம் பூந்தோட்டமாய் பூத்து குலுங்கியது .கொய்யா ,மாமரம் காய் ,கனிகளோடு அழகாய் காட்சி அளித்தது ….எல்லாம் மருது அப்பா வைத்தவை ..அவர் இல்லை என்றாலும் அவரது நிழலாய் இந்த செடிகளும் ,மரங்களும் அவரது ஞாபங்களோடு அந்த குடும்பத்திற்கு நன்மையை விளைவித்தது ….

அப்போது சீனு வீட்டு தொலைபேசி ஒலித்தது … மிஸ்டர் .சீனு உங்க மனைவிக்கு பிரசவ வலி வந்திருச்சு ..சீக்கிரம் ஆஸ்பிட்டல் வாங்க ….

சீனு ஆஸ்பிட்டல் விரைந்தான் ….

சிறிது நேரத்திற்கு பிறகு …. ஆப்ரேசன் தியேட்டரிலிருந்து டாக்டர் வந்தார் ..மிஸ்டர் சீனு உங்களுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கு.. ஆசை ஆசையாய் தன் குழந்தையை காண சென்றான் …

தன் அப்பாவை போலவே தன் மகனுக்கு முகச் சாயல் இருப்பதை கண்டு மகிழ்ந்தான் சீனு … சில மணிநேரம் கழித்து வெளியே செல்ல முற்படும் போது குழந்தை சீனுவின் விரல் பிடித்தது … தன் அப்பாவே தனக்கு மகனாய் திரும்ப பிறந்ததாய் உணர்ந்தான் .. சீனு ..

உண்மையான உறவுகள் என்றுமே அழிவதில்லை … ஏதோவொரு ரூபத்தில் மீண்டும் , மீண்டும் நிழலாய் தொடர்ந்து கொண்டே இருக்கும் …

Categories: சிறுகதை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

சிறுகதை

என் காதல் ரோசா

‘‘தானேத் தன்னான்னே ஏய்
தானேத் தன்னான்னே
நல்லா தடம் பாத்து
நடவு நடு
தானேத் தன்னான்னே
தை மாசம் அறுக்கனுமே
தானேத் தன்னான்னே
தாளம்போட்டு நடவு நடு
தானேத் தன்னான்னே
நல்லா தரை பாத்து
வெளயனுமே
தானேத் தன்னான்னே..!’’

என்று அழகாய் மெட்டெடுத்து,

 » Read more about: என் காதல் ரோசா  »

சிறுகதை

அந்த ஒரு நிலவு

அத்தனை எளிதாய் இல்லை இருந்தும் மிகவும் நேர்த்தியாகவே கையாண்டு கொண்டிருந்தாள் அந்த காலையை அரக்க பரக்க ஓடி பேருந்தை அடைந்தவளை மட்டுமே எதிர்நோக்கிக் கொண்டிருப்பதைப் போல அவள் வருகைக்கும் பேருந்திற்கும் சரியாக இருந்தது. காலையில் குறிப்பிட்ட நேரத் துக்கு முன்பே அனு அந்த ஆபிஸுக்கு வந்து விட்டாள்.

 » Read more about: அந்த ஒரு நிலவு  »

சிறுகதை

ரெட்டைக் கிணறு

அந்திசாயும் வேளையில் சூரியன் மேற்கே மறைந்து கொண்டு இருந்தது. சாமியப்பன் அந்த பச்சை வயல்களுக்கு நடுவே அமைந்திருந்த கிணற்றை மெய் மறந்து பார்த்துக் கொண்டிருந்தான். நீண்ட நாட்களுக்கு பிறகு விடுமுறையில் சொந்த ஊர் திரும்பி இருக்கிறான்.

 » Read more about: ரெட்டைக் கிணறு  »