வறண்டு கிடக்கும் வயல்
வெடித்திருக்கிறது
பனிக்காற்றில் உதடு!
பாய்ந்து வரும் காளை
வலுவாய் பாய்கிறது
தடைச் சட்டம்!
குத்திக் கீறிய காளை
பொல பொலனு கொட்டுகிறது
கொம்பிலிருந்த மண்!
வறண்ட நிலம்
பதிந்து கிடக்கிறது
பாதச் சுவடுகள்!
கூரைமேல் தென்னையோலை
பொத்தென்று விழுகிறது
காற்றில் முருங்கை!
வயலின் நடுவே பனைமரம்
உயர்ந்து நிற்கிறது
அலைபேசி கோபுரம்!
பெரு வெள்ளம்
மூழ்கிப் போனது வயல்
வாங்கிய கடனில்!
ஏற்றிவைத்த தீபம்
பிரகாசமாய் ஒளிர்கிறது
குழந்தையின் முகம்!
இசைபாடும் குயில்
அசைந்தாடுகிறது
மரத்தின் கிளை!
எதிர் வீட்டுப் பூனை
வீட்டையே சுற்றுகிறது
கருவாட்டின் மனம்!
– பிச்சிப் பூ
திருச்சூர் , கேரளா