இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 11

பாடல் – 11

விளியாதான் கூத்தாட்டுக் காண்டலும் வீழக்
களியாதான் காவா துரையுந் – தெளியாதான்
கூரையுள் பல்காலும் சேறலும் இம்மூன்றும்
ஊரெல்லாம் நோவ துடைத்து.

(இ-ள்.) விளியாதான் –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 11  »

இலக்கணம்-இலக்கியம்

கம்பன் கவிநயம்… தொடர் – 10

கம்பனின் கவிநயத்தில் உவமைகள் நாணித் தலைகுனிகின்றன… ஆம்… வியப்பாக இருக்கிறதா ?

தமிழின் அமுதத்தைப் பருக இராமாயணக் காவியத்தை கம்பன் நமக்கு அளித்த கொடை என்றே கூற வேண்டும்.

கம்பனின் நயமிக்க வார்த்தைகளில் உவமைகளும் விலகிச் செல்கின்றன….

 » Read more about: கம்பன் கவிநயம்… தொடர் – 10  »

இலக்கணம்-இலக்கியம்

கம்பன் கவிநயம்… தொடர் – 9

கம்பன் தனது இராமாயணக் காவியத்தில் நதிகள், ஆறுகள், கடல் போன்றவற்றின் எழில் தோற்றத்தையும், இராமன், இலக்குவன் சீதை ஆகியோர் கண்ட அந்த ஆற்றின் தன்மை, மேன்மை மற்றும் வளமை பற்றியும் தனது கவித்திறனால் அழகுற வடித்துள்ளார்.

 » Read more about: கம்பன் கவிநயம்… தொடர் – 9  »

கவிதை

பாதமே வேதம்

உந்தன் பாதம்
எந்தன் வேதம்,
உந்தன் கொலுசு
எந்தன் இன்னிசை.

ஆடும் கால்கள்
ஆனந்த ஊற்று,
ஓடும் பரல்கள்
உயிரின் ஓசை,

வண்ணப் பூச்சு
வடிவின் வீச்சு,

 » Read more about: பாதமே வேதம்  »

மரபுக் கவிதை

தை மகளே பொங்கி வா

மார்கழிப் பனிப்பொழிவு மெல்லக் குறைந்திட
ஊர்முழுதும் செங்கரும்புகள் காட்சியளிக்க
வார்த்தெடுத்த புதுப்பானைகள் பொலிவாக
சேர்குழலியாய் தைமகள் தரணி வருகிறாளே…

மழைமகள் குறைவாக அருளிய மழையிலும்
பிழையில்லா விளைச்சல் நெல் வீடு வரவே
உழைத்த உழைப்பின் பயன் உழவருக்கென்றாக
பிழைக்கும் பிழைப்புக்கு நன்றி சொல்லிடவே…

 » Read more about: தை மகளே பொங்கி வா  »

மரபுக் கவிதை

பொங்கல் வாழ்த்து

தழைக்கவே வந்தாள் தரணியில் தைப்பெண்
தமிழும் செழிக்கத் தலைமகள் வந்தாள்!
எங்கும் பொதுமை ஏற்கும் வண்ணம்
தங்க ஒளியை தந்த கதிரோன்!
பொங்கும் மகிழ்வு புதுப்புதுப் பானையில்
பொங்கலோ பொங்கல் பூமிப் பந்தில்!

 » Read more about: பொங்கல் வாழ்த்து  »

நூல்கள் அறிமுகம்

குதிரையாளி

மதுரை உலகத் தமிழ்ச் சங்கம் கூட்டரங்கில் மஹாகவி ஆசிரியர் வதிலை பிரபா வாசித்த குதிரையாளி நூல் ஆய்வுரை:

●●●

குதிரையாளி சிங்க முகம் கொண்ட கற்பனை விலங்கு.

 » Read more about: குதிரையாளி  »

By Admin, ago
கட்டுரை

எனதுப் பார்வையில் பொன்மனச் செம்மல்

இரும்பைத்தான் காந்தம் கவரும். இனிமையால் கவர்ந்தவர், அன்பால் தன் மக்களின் ரத்தத்தின் ரத்தத்தில் கலந்தவர்.

நீதிக்குத் தலைவணங்கச் சொன்னவரிடம் நீதியே தலைவணங்கியது எனலாம்.

தாய்க்குத் தலைமகனிடம் தாய்க்குலங்களே எங்கள் வீட்டுப்பிள்ளையாக்கிக் கொண்டனர் இவரை.

 » Read more about: எனதுப் பார்வையில் பொன்மனச் செம்மல்  »

புதுக் கவிதை

வீடுபேறு உடைய வீடு

கிளைகள் அடர்ந்த தனிமரம்தான் அது
தன் விழுதுகளை நம்பியே
நிமிர்ந்து நிற்கும் அரைநூற்றாண்டாக …

அதன்கிளைகள் மேல் பசிய இலைகளாகப் படர்ந்தன கிளிகள்…
லட்சோபலட்சம் பைங்கிளிகளின்
ஆராவாரிக்கும் சப்தம் எண்திசையெங்கும் பறக்கச் செய்கிறது.

 » Read more about: வீடுபேறு உடைய வீடு  »